2025 ஏப்ரல் 09, புதன்கிழமை

நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கில் ஜூலியன் அசேஞ்ச் தோல்வி

Super User   / 2012 மே 30 , மு.ப. 10:14 - 0     - 447

பிரிட்டனிலிருந்து சுவீடனுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக விக்கி லீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பிரித்தானிய உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 40 வயதான ஜூலியன் அசேஞ், தனது விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் மூலம் அமெரிக்க அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்கள் உட்பட பல இரகசிய தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

சுவீடனில் பாலியல் வல்லுறவு வழக்கொன்றை விசாரித்த சுவீடன் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இதனால் அவரை பிரிட்டனிலிருந்து நாடுகடத்தும்படி சுவீடன் அரசாங்கம் கோரியுள்ளது.

தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் தொடுத்த வழக்கில் அசேஞ் தோல்வியுற்றார். அத்தீர்ப்புக்கு எதிராக பிரித்தானிய உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் அசேஞ் தோல்வியுற்றார்.

அசேஞ்ச் நாடுகடத்தப்படுவதை தடுப்பதற்கு உயர் நீதிமன்றத்தின் 7 நீதியரசர்களில் ஐவர் மறுத்தனர். இருவர் மாத்திரமே அசேஞ்சுக்கு சாதகமாக தீர்ப்பளித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X