2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

மன்னிப்புக் கோர முடியாது: ஷாருக்கான்

A.P.Mathan   / 2012 மே 18 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை, வன்கெடே மைதானத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்காக மன்னிப்புக் கோர முடியாது என பிரபல நடிகரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார். அத்தோடு வன்கெடே மைதானத்தில் அதிகாரிகள் தவறான விதத்தில் நடந்து கொண்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இன்டியன்ஸ் அணிக்குமிடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற போட்டியின் போது மைதானக் காவலர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதலில் ஈடுபட்டார் எனவும், காவலாளி ஒருவரைத் தாக்கினார் எனவும் குற்றஞ்சாட்டி மும்பை கிரிக்கெட் அமைப்பு ஷாருக்கான் மீது காவல்துறை முறைப்பாட்டைப் பதிவுசெய்திருந்தது.

எனினும் ஆரம்பத்தில் காவலாளிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாகவும், தான் கோபமாகக் காணப்பட்டதாகவும், எனினும் தான் மதுபோதையில் காணப்பட்டேன் என்ற குற்றச்சாட்டை மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அதிகாரிகளும், காவலர்களும் தன்னை மோசமான வார்த்தைகளில் திட்டியதாகவும், அதன் பின்னரே தான் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு புதன்கிழமை போட்டியைக் காணத் தான் மைதானத்திற்குச் சென்றிருக்கவில்லை எனவும், போட்டியைக் காணச் சென்றிருந்த தனது குழந்தைகளை ஏற்றிச் செல்லவே மைதானத்திற்குச் சென்றதாகவும், தன் குழந்தைகளை அவர்கள் தள்ள முற்பட்ட போதே தான் அவ்விடத்திற்குச் சென்றதாகவும் தெரிவித்த ஷாருக்கான், மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

எனினும் ஷாருக்கானின் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள மும்பைக் கிரிக்கெட் அமைப்பு, ஷாருக்கான் குடிபோதையில் காணப்பட்டார் என்பதை மீண்டும் தெரிவித்துள்ளதோடு, குழந்தைகள் மூலம் அனுதாபத்தைப் பெற ஷாருக்கான் முயல்வதாகவும் தெரிவித்துள்ளது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X