2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

பெண்ணுடன் தகாதமுறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டில் ஆஸி வீரர் போமர்ஸ்பாச் கைது

Kogilavani   / 2012 மே 18 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றத்திற்காகவும் அப்பெண்ணின் காதலரை தாக்கிய குற்றத்திற்காகவும் ஐபிஎல் ரோயல் சலெஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடும் அவுஸ்திரேலிய வீரர்  லூக் போமர்ஸ்பாச் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பிரஜையான மேற்படி பெண்ணுடன் மும்பை மயூரா ஷெரட்டன்  ஹோட்டலில் 27 வயதான லுகே போமர்ஸ்பாச் தவறாக நடந்துக்கொண்டமைக்காக நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னையும் தான் திருமணம் செய்யவுள்ளவரையும் ஏனைய சில நண்பர்களையும் மது அருந்துவதற்கு மேற்படி வீரர் அழைத்ததாக அப்பெண் கூறியுள்ளார். சிறிது நேரத்தின் பின் ஆண்களை அங்குவிட்டுவிட்டு தான் நித்திரை கொள்வதற்காக தனது அறைக்கு திரும்பி வந்தததாகவும் ஆனால் போமர்ஸ்பாச் தன்னை பின்தொடர்ந்து வந்து தன்னுடன் தகாத முறையில் நடந்துக்கொண்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இதன்போது தன்னுடைய கணவர் தலையிட்டதால் மேற்படி வீரர் தாக்க தொடங்கியதாகவும் அப்பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

போமர்ஸ்பாச் மீது பின்தொடர்ந்தமை, தாக்கியமை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள்  தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி பெண்ணின் கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போமர்ஸ்பாச் மீது பதியப்பட்டுள்ள முறைப்பாடுகளை நீக்கக் கோரி அழுத்தம் பிறப்பிக்கம்படுதவதாகவும் ஆனால் அதனை தான் செய்யப்போவதில்லையென்றும் அப்பெண் தெரிவித்துள்ளார்.

போமர்ஸ்பாச் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் மயங்கி விழுந்தார். அதையடுத்து அவர் நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.  நாளை திங்கட்கிழமை வரை அவருக்கு இடைக்கால பிணை  அனுமதி வழங்கப்பட்டது. 

இதேவேளை போமர்ஸ்பாச் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்படும்வரை  ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து அவரை இடை நிறுத்துவதாக ரோயல் சலெஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X