2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

எம்.எஸ்.வி.யின் மனைவி ஜானகி அம்மாள் மரணம்

Menaka Mookandi   / 2012 மே 15 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி அம்மாள் தனது 73ஆவது வயதில் சென்னையில் நேற்று திங்கட்கிழமை மாலை காலமாகியுள்ளார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், வீட்டிலிருந்தவாறே சிகிச்சைப் பெற்றுவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கான சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் அவர், மரணமடைந்தார். அவரது இறுதிக் கிரியைகள் இன்று காலை இடம்பெற்றுள்ளன.

ஜானகி அம்மாளின் உடலுக்கு தமிழ் திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தினர். மரணமடைந்த ஜானகி அம்மாளுக்கு, கோபி, முரளி, பிரகாஷ், அரிதாஸ் ஆகிய 4 மகன்களும், லதா, மது, சாந்தி ஆகிய 3 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X