2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டார்

A.P.Mathan   / 2012 மே 13 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் நேற்றைய தினம் கௌரவிக்கப்பட்டார். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தக் கௌரவிப்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜியால் சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், மும்பை இன்டியன்ஸ் அணிக்குமிடையில் நேற்று இடம்பெற்ற போட்டிக்கு முன்னதாக இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வை மைதானத்தில் போட்டியைக் காண வந்திருந்த அத்தனை ரசிகர்களும் கண்டு ரசித்தனர். சர்வதேசப் போட்டி 100 சதங்களைப் பெற்றுக் கொண்டமைக்காகவே இந்த கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

மேற்கு வங்க கிரிக்கெட் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முதலமைச்சர் மம்தா பனர்ஜி தவிர, மேற்கு வங்கக் கிரிக்கெட் அமைப்பின் தலைவரும், முன்னாள் இந்தியக் கிரிக்கெட் சபைத்தலைவருமான ஜக்மோகன் டால்மியா உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சச்சின் டெண்டுல்கருக்கு 100 தங்கக் காசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கருக்கு தங்கத் துடுப்பு ஒன்றையும், பாராட்டுப் பத்திரத்தையும் கையளித்த முதலமைச்சர் மம்தா பனர்ஜி, சச்சின் டெண்டுல்கரை தங்கப் பையன் என விளித்தார். மேற்கு வங்க அரசாங்கத்தின் சார்பில் சச்சின் டெண்டுல்கரை வாழ்த்துவதாகத் தெரிவித்த அவர், சச்சின் டெண்டுல்கர் ஒரு தங்கப் பையன் எனவும், அதன் காரணமாகவே அவருக்கு தங்கத் துடுப்பும், தங்கப் பந்துகளையும் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள் காரணமாக அனைவரும் பெருமையடைவதாகவும், அவரது சாதனைகளுக்காக அவருக்கு மரியாதை செய்வதாகவும் தெரிவித்தார்.

கௌரவிப்பு நிகழ்வில் கருத்துத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், அனைவரது ஆதரவிற்கும் நன்றி செலுத்தியதோடு, தொடர்ந்து வரும் காலங்களிலும் தனக்கும், இந்திய அணிக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X