2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

பொலிஸாரை தகாத வார்த்தையில் திட்டிய வெங்கடேஷ் பிரசாத்தின் மனைவி

Kogilavani   / 2012 மே 08 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரிடம் தகாத வார்த்தைகளை பேசினார் என்ற சர்ச்சையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தின் மனைவியான ஜெயந்தி பிரசாத் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

இந்தியாவின் சின்னசாமி விளையாட்டரங்கில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற ஐபிஎல் போட்டியின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 00.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜெயந்தி பிரசாத் தனது காரில் ஏறுவதற்காக முதியவர் ஒருவருடன் காத்துக் கொண்டிருந்த சந்தரப்பத்தில் ஜெயந்தியை அவ்விடத்திலிருந்து செல்லுமாறு பொலிஸார் பணித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தி பிரசாத் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதன்போது ஜெயந்தி பிரசாத் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாக்குவாதத்தையடுத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால் ஜெயந்தி விட்டுக்கொடுக்கவில்லை.

இதன்போது அங்கு விரைந்த வெங்கடேஷ் பிரசாத்தும் பொலிஸாரிடம் வாக்கு வாதத்தில் இணைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இச்சம்பவத்திற்காக வருந்துவதாக வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

'இச்சம்பவத்திற்காக நாங்கள் இருவரும் வருந்துகிறோம். இவ்விடயத்தை நட்பு ரீதியில் தீரப்பதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். தற்போது இவ்விடயம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது' என அறிக்கையொன்றில் பிரசாத் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X