2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

சோனியா காந்தியைச் சந்தித்தார் சச்சின்

A.P.Mathan   / 2012 ஏப்ரல் 26 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். நல்லெண்ண நோக்கமாக இடம்பெற்ற இச்சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

கடந்த மாதம் தனது 100ஆவது சர்வதேசப் போட்டி சதத்தைப் பெற்றுக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், திருமதி சோனியா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே அவரை இன்று சந்தித்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைப் படைத்த சச்சின் டெண்டுல்கரை தனிப்பட்ட ரீதியில் வாழ்த்துவதற்கு திருமதி சோனியா காந்தி விரும்பியதை அடுத்தே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இன்றைய சந்திப்பில் சச்சின் டெண்டுல்கரோடு அவரது மனைவி திருமதி அஞ்சலி டெண்டுல்கரும், இந்தியக் கிரிக்கெட் சபையின் மூத்த நிர்வாகியும் ஐ.பி.எல். அமைப்பின் தலைவருமாகிய ராஜிவ் சுக்லாவும் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பில் திருமதி சோனியா காந்தி, சச்சின் மற்றும் அவரது மனைவியுடன் 30 நிமிடங்கள் வரை கலந்துரையாடியதாகவும், பொதுவான விடயங்கள் பற்றிக் கலந்துரையாடியதாகவும் தெரிய வருகிறது. அத்தோடு சச்சின் டெண்டுல்கரின் எதிர்காலத்திற்கு அவர் தனது வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தியிருந்தார் எனத் தெரிகிறது.

உலகில் அதிக டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்கள் மற்றும் சதங்களைப் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது 39ஆவது பிறந்த தினத்தை கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X