2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

யுவ்ராஜை லண்டனில் சந்தித்தார் சச்சின்

A.P.Mathan   / 2012 மார்ச் 30 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது கால் விரலில் காணப்படும் உபாதைக்காக பரிசோதனைக்கு லண்டனுக்குச் சென்றிருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த இந்திய அணியின் சகலதுறை வீரர் யுவ்ராஜ் சிங்கை லண்டனில் சந்தித்தார். யுவ்ராஜ் சிங்கின் நண்பரின் இல்லத்தில் இருவரும் ஒரு மணிநேரமாகக் கலந்துரையாடியுள்ளனர்.

தனக்கு ஏற்பட்ட புற்றுநோய்க்காக ஐக்கிய அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த யுவ்ராஜ் சிங், சிகிச்சை நிறைவடைந்ததை அடுத்து தற்போது லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு தனக்கான சிகிச்சைக்காக சென்றிருந்த சச்சின் டெண்டுல்கர், யுவ்ராஜை சந்தித்து அவர் விரைவாகக் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

தனக்கான கீமோதெரபி சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இம்மாதம் 18ஆம் திகதி யுவ்ராஜ் சிங் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் யுவ்ராஜ் சிங் ஏப்ரல் மாதத்தின் முதற்பகுதியில் இந்தியாவை வந்தடைவார் எனவும், மே மாதத்திலிருந்து போட்டிகளில் பங்குபற்ற ஆரம்பிக்கக்கூடியதாக அமையும் எனவும் நம்பபப்படுகிறது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0

  • M.H.M.KA Wednesday, 04 April 2012 05:44 AM

    வருத்தம் சுகமாகனும் அல்லாஹு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X