2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

ஹசிம் அம்லாவுக்குச் சத்திரசிகிச்சை

A.P.Mathan   / 2012 மார்ச் 24 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் ஹசிம் அம்லாவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இடம்பெற்று வரும் நியூசிலாந்து - தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹசிம் அம்லா மேலதிகமாகப் பங்குபெற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹசிம் அம்லா இன்று துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது கிறிஸ் மார்ட்டினின் பந்தொன்றை அடிக்க முனைந்தபோது பந்து துடுப்பில் பட்டு அவரது கீழ் இடைப்பகுதியைத் தாக்கியிருந்தது. அப்போது 33 ஓட்டங்களைப் பெற்றிருந்த அம்லா, மைதானத்தில் வைத்து சிகிச்சையைப் பெற்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 63 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் அவர் ஆட்டமிழந்த பின் அவருக்கு வெலிங்டன் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது சத்திரசிக்சை வெற்றியளித்துள்ளதாகவும், அம்லா தனது முழுமையான உடற்தகுதியை விரைவில் அடைவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தென்னாபிரிக்க அணியின் சிரேஷ்ட வீரர் ஜக்ஸ் கலிஸ் கழுத்தில் ஏற்பட்ட உபாதை காரணமாக மூன்றாவது போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X