2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

தில்ஷானுடன் நெருங்கி பழகினேன்; சூதாட்டத்தில் ஈடுபடவில்லை: நுபுர் மேக்தா

A.P.Mathan   / 2012 மார்ச் 22 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இடம்பெற்ற டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளின்போது இலங்கை அணியின் திலகரட்ண தில்ஷானைத் தான் சந்தித்துக் கொண்டிருந்ததாக சூதாட்டக் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இந்திய நடிகை நுபுர் மேக்தா தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட சூதாட்டம் சம்பந்தமான செய்திகளில் இங்கிலாந்துப் பிராந்தியப் போட்டிகளில் சூதாட்டம் பரவலாக இடம்பெறுவதாகவும், சர்வதேசப் போட்டிகளிலும் இவை இடம்பெறுவதாகவும் தெரிவித்திருந்தது. அத்தோடு சூதாட்டத்தில் வீரர்களை ஈடுபடுத்த பொலிவூட் நடிகை ஒருவர் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்து நுபுர் மேக்தாவின் புகைப்படத்தை மாற்றிய வடிவில் பிரசுரித்திருந்தது.

குறித்த செய்தியை அடுத்து வெகுண்டெழுந்த நுபுர் மேக்தா, தான் கிரிக்கெட்டை விரும்புபவர் எனவும், எனினும் கிரிக்கெட்டோடு தனக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது எனவும் முன்னர் தெரிவித்திருந்தார். குறித்த பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே தற்போது தில்ஷானுடனான தன்னுடையை தொடர்பை தற்போது அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நான் தில்ஷானைச் சந்தித்துக் கொண்டிருந்தேன், அவருடன் கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றேன். ஆனால் அதற்காக நான் போட்டி நிர்ணயங்களில் ஈடுபட்டேன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

அது தன்னுடைய தனிப்பட்ட விடயம் எனத் தெரிவித்த நுபுர் மேக்தா, தனது உறவுத் தொடர்புகள் - போட்டி நிர்ணயம் தொடர்பான பெரிய குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து கருதப்படக் கூடாது எனவும் தெரிவித்தார்.

தற்போது கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் கென்சிங்டனில் அமைந்துள்ள ரோயல் கார்டின் ஹொட்டலில் தனது அறையை வேறு எவருடனும் பகிர்ந்ததையும் அவர் மறுத்தார். அந்த ஹொட்டலில் தான் குறித்த காலத்தில் தங்கியிருந்ததாகவும், எனினும் தனது அறையை எவருடனும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும், ஒரு நாளுக்கு 500 ஸ்ரேர்லிங் பவுண்ட்ஸ்களைத் தான் வாடகையாகச் செலுத்தியதாகவும், அதற்காக பற்றுச்சீட்டுக்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தில்ஷானைத் தவிர வேறு சில கிரிக்கெட் வீரர்களையும் சந்தித்ததை ஏற்றுக்கொண்ட அவர், ஏனையவர்களை ஏன் இப்பிரச்சினைக்குள் உள்வாங்க வேண்டும் எனக் கேள்வியெழுப்பியதோடு, அவர்களை சாதாரணமாக சந்தித்ததாகத் தெரிவித்தார்.

இதனிடையே இக்குற்றச்சாட்டுக்களை அடுத்து தடுமாறிவரும் நுபுர் மேக்தாவின் பொலிவூட் திரைப்பட வாழ்க்கை திரும்பவும் எழுச்சி பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஒருவர் நுபுர் மேக்தாவிற்கு வாய்ப்புக்களை வழங்க முன்வந்துள்ளதோடு, அடுத்த பருவகாலத்திற்கான "பிக் பொஸ்" நிகழ்ச்சிகளிலும் அவர் பங்குபற்றவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0

  • nawshad Thursday, 22 March 2012 06:53 PM

    உண்மையாவா? நம்பவே முடியல.

    Reply : 0       0

    haleemraja Thursday, 22 March 2012 07:54 PM

    எப்படி சரி ஸ்ரீலங்கவா மட்டம் தட்ட போறாங்கள். 2009 vidayam ippa

    Reply : 0       0

    uvais.m.s Friday, 23 March 2012 04:08 AM

    இலங்கை அணியினரின் முன்னேற்றத்தை தடுக்கும் முயற்சியாகவே இதை கருத வேண்டி உள்ளது. பணத்துக்காக தொழில் செய்யும் இப்படியான நடிகைகள் பணத்தை இதற்கு மேலயும் சொல்லுவார்கள்.

    Reply : 0       0

    siriththiran Friday, 23 March 2012 05:05 AM

    தில்ஷான் ...... கேளிக்கை விடுதிக்கு இந்த பிகர் உடன் போனாரா ..... குடுத்து வைச்ச மனுஷனையா ....

    Reply : 0       0

    Maravan Friday, 23 March 2012 06:22 PM

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே ....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X