2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

அவுஸ்ரேலிய செனட் சபைத் தேர்தலில் ஜூலியன் அசெஞ்ச்

A.P.Mathan   / 2012 மார்ச் 20 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகரான ஜூலியன் அசெஞ்ச், அவுஸ்ரேலிய செனட் சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசெஞ்ச், அவுஸ்ரேலியாவில் பிறந்து, வளர்ந்த நிலையில், இங்கிலாந்தில் வீட்டுக்காவலில் இருந்த நிலையிலேயே செனட் சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் என்ற பிரபலமான இணையத்தளத்தின் ஸ்தாபகர் என்ற ரீதியில் ஜூலியன் அசெஞ்ச் உலகம் முழுவதும் அறியப்பட்டுள்ளார். ரகசியமான அரசத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிட்டு வெளிப்படையான அரச காரியங்களுக்கும், சுதந்திரமான பேச்சுக்குமாக தொடர்ந்தும் வலியுறுத்திவரும் 40 வயதான ஜூலியன் அசெஞ்ச், அவுஸ்ரேலியாவின் குயீன்ஸ்லாந்து பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

2010ஆம் ஆண்டு சுவீடன் பொலிஸாரால் பாலியல் குற்றச்சாட்டு ஒன்றிற்காக ஐரோப்பியாவில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஜூலியன் அசெஞ்ச், 2010ஆம் ஆண்டு டிசெம்பரில் இங்கிலாந்துப் பொலிஸாரிடம் சரணடைந்திருந்தார். (க்ரிஷ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X