Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 06 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்கால நடிகர்கள் பெண்களைப் பிரதானமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு பின்நிற்கின்றனர் என சிரேஷ்ட நடிகர் அனில் கபூர் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரதான நடிகர்கள் பெண்களைப் பிரதானமாகக் கொண்ட திரைப்படங்களில் நடிப்பதற்கு விரும்புவதில்லை எனத் தெரிவித்த அனில் கபூர், தன்னைப் பொறுத்தவரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் பெண்களைப் பிரதானப்படுத்தும் திரைப்படங்களே மிகச்சிறப்பான திரைப்படங்களாக அமைந்தன எனத் தெரிவித்தார்.
பேட்டா, லஜ்ஜா, ஜூடாய், பிவி நம்பர் 1 போன்ற பெண்களைப் பிரதானமாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற அனில் கபூர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதர் இந்தியா என்ற திரைப்படம் பெண்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்ட திரைப்படம் என்பதை ஞாபகமூட்டியதுடன், இதுவரை அத்திரைப்படம் மிகவும் பெருமையுடன் நினைவுகூரப்படுவதை சுட்டிக் காட்டினார்.
பெண்களைப் பிரதானமாகக் கொண்ட திரைப்படங்களில் நடித்தமைக்காகப் பெருமைப்படுவதாகத் தெரிவித்த அனில் கபூர், அவை தன்னைப் பெருமைப்படுத்துவதாகவும், பிரதான நடிகர்கள் இவ்வாறான திரைப்படங்களில் பங்கேற்பதற்கு முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். லவசா பெண்கள் ட்ரைவ் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.
52 வயதான அனில் கபூர் ஏராளமான ஒஸ்கார் விருதுகளை வெற்றிகொண்ட ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (க்ரிஷ்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .