Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனின் காலஞ்சென்ற இளவரசி டயானா, பக்கிங்ஹாம் அரண்மனையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு அனுப்பிய காதலர் தின வாழ்த்து அட்டை ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த அட்டையின் முன்பக்கத்தில் 'ஹே வலன்டைன், இளவரசி டயானாவிடமிருந்து வலன்டைன் அட்டை பெறும் ஆண்கள் எண்ணிக்கை அதிகமல்ல' என குறிப்பிடப்பட்டுள்ளது. உள்ளே, 'அவர்களில் நீங்களும் ஒருவர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்ஜுக்கு டயானாவிடமிருந்து என எழுதி டயானா கையெழுத்திட்டுள்ளார்.
'1989 ஆம் ஆண்டு படைவீரரான ஜோர்ஜ் ஸ்மித் என்பவருக்கு இந்த பிரத்தியேக வாழ்த்து அட்டையை டயானா அனுப்பியிருந்தார். அது இளவரர் சார்ள்ஸுடன் டயானா சே;ந்துவாழ்ந்த காலம்.
ஆனால், இந்த வாழ்த்து அட்டையை டயானா அனுப்பியதற்கு அவர் மீதான காதல் எதுவும் காரணமல்ல. காதலி இல்லாத அரண்மனை ஊழியர்களுக்காக டயானா வேடிக்கையாக அனுப்பிய வாழ்தது அட்டையே இது.
இதுபோன்ற வாழ்த்து அட்டைகளை அரண்மனையின் வேறு ஊழியர்களுக்கும் டயானா அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது. ஜோர்ஜ் ஸ்மித் 1989 ஆண்டின் பிற்பகுதியில் தன்னை அரண்மனை ஊழியர் ஒருவர் வல்லுறவுக்குள்ளாகியதாக குற்றம் சுமத்தியவர் என டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
1997 ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த வாழ்த்து அட்டையையும் டயானாவின் வேறு பல ஞாபகார்த்த பொருட்களையும் ஜோர்;ஜ் ஸ்மித் பத்திரப்படுத்தி வைத்திருந்தார். 2004 ஆம் ஆண்டு தனது 45 ஆவது வயதில் ஜோர்ஜ் ஸ்மித் காலமானதையடுத்து, ஜோர்;ஜின் குடும்பத்தினர் வசம் அவை இருந்தன.
அவற்றில் பல பொருட்களை தற்போது ஏலத்தில் விற்பனை செய்ய அக்குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். இந்த வாழ்த்து அட்டையை 8000 ஸ்ரேலிங் பவுண்களுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
uvais Saturday, 18 February 2012 03:59 PM
யாரையுமே விட்டு வைக்கவில்லையா இவர்?
Reply : 0 0
ansar Tuesday, 28 February 2012 12:25 PM
இது எல்லாம் ஒரு செய்தியா?
Reply : 0 0
ram Thursday, 01 March 2012 06:17 PM
அன்சர், நீங்கள் தற்போது எங்கிருந்து வந்தீர்கள். பூமியா அல்லது வேற்று உலகமா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago