2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

சஞ்சய் தத்தின் விருந்தில் திரைப்பட இயக்குநரை தாக்கிய ஷாருக்கான்

Super User   / 2012 ஜனவரி 30 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவூட் திரையுலகின் முன்னிலை நடிகரான ஷாருக் கான், திரைப்பட இயக்குநர் ஷிரிஷ் குந்தரை விருந்து நிகழ்ச்சியொன்றில் தாக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஷாருக்கான் நடித்த 'ரா வன'; திரைப்படம் வெளியான சமயத்தில் அத்திரைப்படம் குறித்து ஷிரிஷ் குந்தர் டுவிட்டர் மூலம் கிண்டலடித்தமையே இதற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

ஷிரிஷ் கான், பொலிவூட்டின் பிரபல நடன இயக்குநர்களில் ஒருவரும் திரைப்பட இயக்குநருமான பராஹ்கானின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.  பராஹ் கான் முன்னர் ஷாருக்கின் நெருங்கிய நண்பியாகவும் விளங்கியவர்.

இத்தாக்குதல் சம்பவத்தை பராஹ் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

பொலிவூட்டின் மற்றொரு பிரபல நடிகரான சஞ்சய் தத் நடத்திய விருந்து வைபவத்திலேயே இன்று திங்கட்கிழமை அதிகாலை மேற்படி மோதல் இடம்பெற்;றாக தெரிவிக்கப்படுகிறது.
 
மும்பை புறநகர் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்தவிருந்து நிகழ்வு இடம்பெற்றது. பில்ம்பேர் விருது நிகழ்வு முடிந்தவுடன் இவ்விருந்துக்கு வந்தார் ஷாருக்கான்.

இது குறித்து பராஹ் கான் கூறுகையில்,

'எனது கணவர் ஷிரிஷ் கானை ஷாருக் கானும் அவரின் 3 மெய்ப்பாதுகாவலர்களும் சஞ்சய் தத்தின் விருந்தில் வைத்து தாக்கினர். தன்னைப் ஏன் ஷிரிஷ் டுவிட் செய்தார் என ஷாருக்கான் கேட்டார். எமது தரப்பில் ஆத்திரமூட்டல்கள் எதுவும் இடம்பெறவில்லை' என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் கண்ட வேறு சிலர் கூறுகையில், 'என்ன நடந்தெனத் தெரியவில்லை. நாம் ஷாருக்கான் உள்ளே வருவதை கண்டோம்.  அவர் நேராக ஷிரிஷ் கானை நோக்கிச் சென்று, ஷிரிஷின் நீண்ட தலைமயிரை பிடித்திழுத்து கீழே தள்ளினார்.

ஷாருக் இப்படி நடந்துகொள்வதை நாம் முன்னர் ஒருபோதும் கண்டதில்லை. ஹோட்டலின் உரிமையாளர் பாபா தேவன் ஓடிவந்து தலையிட்டார்.  அவரை இதில் தலையிட வேண்டாம் என ஷாருக் கூறினார்.  அந்த ஹோட்டல் தனக்குச் சொந்தமானது என்பதால் தான் தலையிட வேண்டும் என தேவன் கூறினார்.  ஷாருக்கானை சஞ்சய் தத் அப்பால் தள்ளிச் சென்றிருக்காவிட்டால் இம்மோதல் நீண்டிருக்கும்' எனத் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதல் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு எதுவும் செய்யவில்லை என ஷிரிஷ் குந்தர் தெரிவித்துள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X