Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 22 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு நட்சத்திரமான ஷேன் வோர்னின் வெண்கலச் சிலையொன்று மெர்போர்ன் கிரிக்கெட் அரங்கிற்கு வெளியே திறந்துவைக்கப்பட்டுள்ளது.
லூயிஸ் லோமென் என்பவர் வடிவமைத்த இச்சிலை, லெக் ஸ்பின் பந்துவீசத் தயாராகும் வோர்னின் சாயலில் உள்ளது. இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இச்சிலையின் திறப்பு விழாவில் ஷேன்வோர்னும் பங்குபற்றினார்.
'இச்சிலை ஒரு லெக் ஸ்பின்னரரைப் போன்று உள்ளது. எனவே டெரில் (குல்லினன்- தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்) இதற்கு முகம் கொடுக்க சிரமப்படுவார்' என ஷேன் வோர்ன் வேடிக்கையாகக் கூறினார்.
ஷேன் வோர்னின் காதலியான நடிகை லிஸ் ஹர்லி, அவரின் பெற்றோர், ஷேன் வோர்னின் முன்னாள் மனைவி சிமோன் கல்லஹன் மூலம் பிறந்த மகள்கள் புரூக் (13), சம்மர் (9) மகன் ஜக்ஸன் (11) ஹர்லியின் மகன் டேமியன் (9) ஷேனின் சகோதரர் ஜேஸன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Ganesh Sunday, 25 December 2011 04:28 PM
அப்படி என்றால் முரளிக்கு என்ன சிலை வைக்கணும்
Reply : 0 0
usaidh Monday, 26 December 2011 10:45 PM
கணேஷ் முரளிக்கு நம்ம நாடு தான் வைக்கனும் அவுஸ்திரலியா வைக்காது.
Reply : 0 0
Ganesh Wednesday, 28 December 2011 06:21 PM
அதுதான் முரளி நீங்கிய பிறகு ஒரு நல்ல ball இல்ல இருந்தும் இலங்கையர் அவரை ஒரு சுழல் பந்துவீச்சு பயிற்றுநராக கூட எடுக்கல்ல இதுதான் முற்றத்து மல்லிகைமணப்பது இல்லை என்பதோ.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago