Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தித் திரையுலகின் பிரபல நடிகராகவும் தயாரிப்பாளராகவும் விளங்கிய தேவ் ஆனந்த் இன்று லண்டனில் காலமானார். 88 வயதான அவர் மாரடைப்பால் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்தித் திரையுலகின் காதல் மன்னன் என வர்ணிக்கப்பட்டவர் தேவ் ஆனந்த். இவரின் மூத்த சகோததரர் சேத்தன் ஆனந்த், இளைய சகோதரர் விஜய் ஆனந்த் ஆகியோர் திரைப்பட இயக்குநர்களாவர். இவரின் சகோதரி ஷீல் காந்தா கபூர் பிரபல இந்தி மற்றும் ஆங்கில திரைப்பட இயக்குநர் சேகர் கபூரின் தாயார் ஆவார்.
தேவ் ஆனந்தின் மரணம் தொடர்பாக தமிழக முதலமைச்சரும் முன்னாள் சினிமா நட்சத்திரமுமான ஜெயலிலிதா, அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அபிஷேக் பச்சன், லதா மங்கேஸ்கர் என இந்திய திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago