Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் நடிகையான வீனா மலிக்கின் நிர்வாணப் புகைப்படம் ஆண்கள் சஞ்சிகையொன்றின் அட்டைப்படமாக வெளிவந்தமை இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2000 ஆம் ஆண்டுமுதல் உருது மற்றும் பஞ்சாபி மொழி திரைப்பபடங்களில் நடித்த வீனா மலிக் பாகிஸ்தான் தொலைக்காட்சிக் காட்சிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
தற்போது இந்தியாவில் ஹிந்தித் திரைப்படங்கள் இரண்டில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், எவ்.எச்.எம். எனும் சர்வதேச ஆண்கள் சஞ்சிகையின் இம்மாத அட்டையில் வீனா மலிக்கின் நிர்வாணப் புகைப்படம் வெளியாகியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்புகைப்படத்தில் வீனா மலிக்கின் கையில் ஐ.எஸ்.ஐ. என பொறிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானின் தேசிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐயை குறிப்பதாக கூறப்படுவதால் இவ்விடயம் மேலும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.
தான் ஒருபோதும் நிர்வாணமாக போஸ் கொடுக்கவில்லை எனவும் இப்புகைப்படம் போலியானவை எனவும் வீனா மலிக் மறுத்தார்.
நான் இப்படி ஒருபோதும் போஸ்கொடுக்கவில்லை. இது குறித்து ஆராயுமாறு எனது சட்டக்குழுவினரை கோரியுள்ளேன் என வீனா கூறினார்.
எவ்எச்எம். இன்டியா சஞ்சிகையின் ஆசிரியர் கபீர் சர்மா இக்கூற்றை மறுத்துள்ளார்.
வீனா மலிக் எமக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தார். கடந்த நவம்பர் 22 ஆம் திகதி மும்பையில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இப்படப்பிடிப்பு தொடர்பான வீடீயோ பதிவும் எம்மிடமுள்ளது என கபீர் சர்மா தெரிவித்துள்ளார்.
33 வயதான வீனா மலிக் ஏற்கெனவே பாகிஸ்தானில் சர்ச்சைக்குரிய ஒருவராக பார்க்கப்பட்டவர்.
இந்நிலையில் தற்போது நிர்வாண புகைப்படம் மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் பாகிஸ்தானிய பிரஜாவுரிமையை ரத்துச் செய்ய வேண்டும் என சிலர் கோரிக்க விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் இது தொடர்பாக கூறுகையில், தான் மேற்படி புகைப்படங்களை பார்க்கவில்லை எனவும் ஆனால் வீனா மலிக் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தால் அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
hussain Saturday, 03 December 2011 10:52 PM
இது மிக்க ஓவர். இவரை முஸ்லிம் என்று அழைக்க வேண்டாம்.
Reply : 0 0
Ramesh Sunday, 04 December 2011 01:05 AM
பிரபலமடைவதற்காகவா பணத்துக்காகவா?
Reply : 0 0
uma Sunday, 04 December 2011 04:18 PM
நம்ம மும்தாஜ் முஸ்லிம் இல்லையா
Reply : 0 0
samuha thondan Sunday, 04 December 2011 06:52 PM
இவள் முஸ்லிம் என்று யார் அழைப்பது? கேவலம்
Reply : 0 0
easternbrother Sunday, 04 December 2011 08:12 PM
தம்பிமாரே..... ஏன் இவளை முஸ்லிம் என அழைக்க கூடாது.. .. இது உண்மை எனில் இவள் ஓர் பெரும் ஒழுக்கங் கேட்ட பாவி... அவ்வளவுதான்...... இறைவன் மன்னிக்கலாம்.. ஆனால் ஒரு முஸ்லிமை முஸ்லிம் இல்லை என்று தீர்ப்பு எழுதி நீங்கள் பெரும் பாவிகளாக மாறாதேங்கோ ராசா......
Reply : 0 0
anees Monday, 05 December 2011 05:38 PM
அவள் நடிகை ஆனபோதே முஸ்லிம் பிரஜா உரிமையை இழந்துவிட்டாள், இனியென்ன....
Reply : 0 0
mtmsiyath Tuesday, 06 December 2011 03:03 AM
இது உன்மை என்று நான் நம்பவில்லை. நவீன தொழில் நுட்பத்தாலும் இப்படி உருவாக்க முடியுமல்லவா?
Reply : 0 0
vaasahan Wednesday, 07 December 2011 06:34 PM
அவசரப்படாதீர்கள். ஐ எஸ் ஐ எனப் போடப்பட்டது ஏன் ரோ பயங்கரவாதமாக இருக்கமாட்டாது. நாம் இப்படித்தான். வெறும் குருட்டுக் கலாசரமும் முட்டாள் விமர்சனத்தாலும் படைக்கப்பட்ட விலங்குகளே.
Reply : 0 0
Rumi - London Thursday, 08 December 2011 02:39 PM
be acting she discredited Islamic teachings and spoiling many youths. She should be put in jail for life. see Pakiatn GEO tv and see how the so called pakitani women muslim women sometimes exposing worse than non muslim attire.
Reply : 0 0
jjjjjjjjjjjjjj Wednesday, 21 December 2011 02:51 PM
நல்லதை கேட்க, பார்க்க முடியவில்லை
Reply : 0 0
Ahamed Wednesday, 21 December 2011 10:48 PM
இவை அனைத்தும் யாருக்கு?? ஏன் அழகை விரும்பக்கூடாது?? இவை நமக்காகத்தான்!!!! வேன்டாம் சண்டை ,!..
Reply : 0 0
Arafath Saturday, 25 February 2012 02:16 PM
அவக்கு கூதல் போல.
ISI இட புல் மீனிங் என்னன்னா "இனி சொல்லமாட்டன் இப்பிடித்தான்" என்பதுதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago