2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

அம்மாவானார் ஐஸ்வர்யா ராய்

Super User   / 2011 நவம்பர் 16 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் உலக அழகியும் இந்தியாவின் முன்னிலை திரைப்பட நடிகைகளில் ஒருவருமான ஐஸ்வர்யா ராய் இன்று தாயாகியுள்ளார்.

ஐஸ்வர்யா இன்று பெண் குழந்தையொன்றை பெற்றதாக அவரின் கணவர் அபிஷேக் பச்சன் அறிவித்துள்ளார்.

38 வயதான  ஐஸ்வர்யா, மும்பை செவன்ஸ் ஹில் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை 4 மணியளவில் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் பிரசர அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் 6 மணித்தியாலங்களின்பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

தான் தாத்தாவாகியமை குறித்து பொலிவூட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

"நான் அழகான பெண் குழந்தைக்கு தாத்தாவாகிவிட்டேன். ஒரு தாத்தா பரவசமடைந்துள்ளார்" என ட்விட்டரில் தெரிவித்தார் அமிதாப்.

1994 ஆம் ஆண்டு தனது 21 ஆவது வயதில் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார்.

 ஐஸ்வர்யா ராய்க்கு வயிற்றில் நோயொன்று இருப்பதால் அவரால் கருத்தரிக்க முடியாதுள்ளதாக வதந்தி பரவியது. இதற்கு அவரின் மாமனரான அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா 11.11.11 ஆம் திகதி குழந்தை பெறுவாரா இல்லையா என்பது குறித்து 150 கோடி இந்திய ரூபாவுக்கு சூதாட்டம் இடம்பெற்றதாக சூதாட்ட முகவர்கள் தெரிவித்திருந்தனர்.
 


You May Also Like

  Comments - 0

  • Nishanthan Wednesday, 16 November 2011 07:46 PM

    வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா அன்ட் அபிஷேக் பச்சன்

    Reply : 0       0

    Dilan Thursday, 17 November 2011 12:55 AM

    அப்போ இன்னும் 20 வருடங்களில் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு உலக அழகி பட்டம் காத்திருக்கிறது?

    Reply : 0       0

    fazal Friday, 18 November 2011 01:34 PM

    yea yea நாட்டிற்கும் ஊருக்கும் சமூகத்திற்கும் முக்கியமான ஒரு செய்தி .

    Reply : 0       0

    Rauf Saturday, 19 November 2011 05:21 PM

    என்னத்த பேசுவது என்று விவஸ்தையே இல்லாம போச்சி.

    Reply : 0       0

    haleemraja Monday, 21 November 2011 04:58 PM

    முதல் தாய் ஐயோ ஐயோ சின்னப்புள்ளதனமா இல்ல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X