2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

இசைஞானி இளையராஜாவின் மனைவி மரணம்

Menaka Mookandi   / 2011 நவம்பர் 01 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா தனது 58ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார். மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.40 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இசையமைப்புப் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ள இளையராஜாவுக்கு, ஜீவா மறைந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வீடு திரும்பியுள்ளார் என இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

பண்ணைபுரத்தைச் சேர்ந்த ஜீவா, இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரி மகள் ஆவார். இளையராஜா - ஜீவா தம்பதியருக்கு கார்த்திக் ராஜா, யுவன்ஷங்கர் ராஜா ஆகிய இரண்டு மகன்களும், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர்.

மறைந்த ஜீவாவின் உடலுக்கு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதேபோல் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Nirmalalraj Tuesday, 01 November 2011 06:46 PM

    இசைஞானிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

    Reply : 0       0

    vanndu Tuesday, 01 November 2011 11:57 PM

    இசை ராஜவே என் இளையராஜாவே நீ கலங்காதிரு உன் இசையில் அவள் வாழ்கிறாள்.

    Reply : 0       0

    Lion S. Thairi Friday, 11 November 2011 04:16 AM

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X