Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 30 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் புகழ்பெற்ற பொப்பிசை பாடகியான ரிஹானா, வட அயர்லாந்து வயல் ஒன்றில் படப்பிடிப்பொன்றில் ஈடுபட்டிருந்தபோது அவரின் கவர்ச்சி ஆடைகளால் விசனமடைந்த வயல் உரிமையாளரான விவசாயி, ரிஹானாவை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
பார்படோஸ் நாட்டைச் சேர்ந்த 23 வயதான ரிஹானா, 'வி பௌண்ட் லவ்' எனும் பெயரிலான தனது புதிய வீடியோ அல்பத்தின் பாடல் காட்சியொன்றுக்காக வட அயர்லாந்தில் தனியார் வயல் ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினார்.
ஆனால் பாடகி ரிஹானா நீச்சல் உடையுடன் படுகவர்ச்சியாக தனது வயலில் ஆடிப்பாடுவதைக் கண்டு தீவிர கிறிஸ்தவ மதப்பற்று கொண்ட 60 வயது விவசாயியான அலன் கிரஹம் ஆத்திரமடைந்துவிட்டார். அதையடுத்து அங்கிருந்து வெளியேறுமாறும் ரிஹானாவுக்கு அவர் உத்தரவிட்டார்.
இது குறித்து, கிரஹம் எனும் மேற்படி விவசாயி கூறுகையில், 'யாரோ என்னை தொலைபேசியில் அழைத்து படப்பிடிப்புக்காக எனது வயலை பயன்படுத்த அனுமதி கோரும்வரை ரிஹானா என்பவர் குறித்து நான் ஒருபோதும் கேள்விபட்டிருக்கவில்லை. அவர் பெரிய பொப் நட்சத்திரம் எனக்கூறினார்கள். எனக்கு அந்த விவகாரங்களில் அவ்வளவு அறிவு இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
ரிஹானாவின் நீச்சல் உடைக்கு அப்பால் அவர் ஆடை அணியாதவர் போன்று காணப்பட்டதாக கிரஹம் தெரிவித்துள்ளார். ரிஹானாவின் நடன அசைவுகளும் கிரஹமை ஆத்திரமூட்டின.
இந்நிலையில் படப்பிடிப்புக்குழுவினரை வெளியேற உத்தரவிட்டதுடன் ரிஹானாவை பைபிளை வாசித்து பார்த்து கடளைப் பற்றி அறியுமாறும் புத்திமதியும் கூறி அனுப்பியதாக 4 பிள்ளைகளின் தந்தையான 61 வயதான கிரஹம் கூறியுள்ளார்.
maazeen Friday, 14 October 2011 03:17 PM
இஸ்லாமிய கருத்துக்கள் உண்மையாகின்றன.
Reply : 0 0
Abdul Jabbar Wednesday, 16 November 2011 02:14 AM
இல்லை கணேசமூர்த்தி, சத்தியத்தை சொல்லும் பகுதி என்று வைத்துக் கொள்ளுங்கள்.
Reply : 0 0
Arsath Tuesday, 15 November 2011 08:58 PM
தட்ஸ் good
Reply : 0 0
Nisfar hasan maruthur Tuesday, 15 November 2011 03:39 AM
அது சரி ! நீங்கள் உங்கள் நாட்டு தெருக்களில் சுற்றியது கிடையாதா? கிரகம். செய்தது சரி ஆனால் எனக்கு கொஞ்சம் இடிக்கத்தான் செய்யுது, நன்றியுடன் நான் ,,,,,,,,
Reply : 0 0
risan Sunday, 06 November 2011 05:08 PM
sir unkele pole ovvoru werum irunta ulehetthule anerteme yetpadatu.
Reply : 0 0
ganeshamoorthy Thursday, 03 November 2011 06:48 PM
இப்பகுதி இஸ்லாம் பரப்பும் பகுதியா?
Reply : 0 0
Irfan Sunday, 30 October 2011 08:16 PM
neechchal udaiyodu dance adikkiranda kathava pooddittu veeddukkulla adikkanum.
Reply : 0 0
hutha Saturday, 29 October 2011 05:27 PM
உங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் சேவை பாராட்டப்பட படக்கூடியது.
Reply : 0 0
najath Saturday, 22 October 2011 02:57 AM
உங்களை போன்று ஒவ்வொருவரும் நடக்க வேண்டும் தலைவரே. உங்களை போன்றவர்கள் இஸ்லாத்திற்கு கட்டாயம் தேவை.
Reply : 0 0
rajiah Friday, 21 October 2011 11:08 PM
நீங்கள் செய்தது சரி .
Reply : 0 0
anilar Wednesday, 19 October 2011 05:31 AM
http://en.wikipedia.org/wiki/Rihanna
Reply : 0 0
mtmsiyath Sunday, 16 October 2011 03:06 PM
ரிஹானாவின் செயலை இஸ்லாம் வெறுக்கின்றது.
Reply : 0 0
Akkaraipattu Sunday, 02 October 2011 04:46 AM
நன்றி பெரியவரே ........
Reply : 0 0
msfasly Tuesday, 11 October 2011 12:31 AM
இதையே ஒரு முஸ்லிம் அரபு நாட்டில் செய்திருந்தால் ஊடகம் இவ்வாறு செய்தியை மாற்றி அமைத்து இருக்கும்.
" இஸ்லாமிய மிதவாத பெரியார் பாடகி ரிஹானா தான் விரும்பி அணிந்த ஆடையை எதிர்த்தமையால் பெண் உரிமையை புறக்கணித்து உள்ளார். மேலும் ரிஹானாவை இஸ்லாத்தை ஏற்கும் படியும் இல்லாவிட்டால் கொலை செய்வதாகவும் வற்புறுத்தியுள்ளார்" என்று.
Reply : 0 0
faroos Saturday, 08 October 2011 04:16 PM
மதிப்புக்குரிய பெரியவரே உங்களைப் போன்று ஒவ்வொரு ஆத்மாவும் இருந்தால் உலகம் செழிக்கும், உண்மை உரைக்கும்,
புதியன பிறக்கும் புத்துயிராய்,
பசுமை பொழியும் பாரினில். பெரியவரே! நீங்கள் ஒரு சிறந்த மனிதர் ஏன் ஒரு முறை இஸ்லாத்தை பற்றி அறியவில்லை?
எப்படி இருந்தும் சுவனம் ஓரிறை கொள்கைக்கு மட்டும்தான் அதுதான் இஸ்லாம்.
Reply : 0 0
suddi Tuesday, 04 October 2011 06:32 PM
அப்போ நீச்சல் உடைக்களுமில்லாமல் திரியும் நாட்டிலுள்ளவர்கள் தீவிர மதப்பற்று கொண்டவர்கள் இல்லையோ?
Reply : 0 0
anas Tuesday, 04 October 2011 04:54 AM
இப்படிப்போன்றோருக்கு சொல்லிவிளங்காது. நீங்கள் கசையடிகள் கொடுத்திருக்கலாம் மிஸ்ரா கிரஹம். உங்கள் துனிச்சலுக்கு ரொம்ம்ப நன்றி.
Reply : 0 0
Jay Tuesday, 04 October 2011 01:10 AM
தனி மனித ஒழுக்கத்திற்கு மத அடையாளம் தேவை இல்லை!
Reply : 0 0
Akkaraipattu Monday, 03 October 2011 07:27 AM
@Ifham....சினப்புள்ளத் தனமா இல்ல உங்கட கருத்து.........
Reply : 0 0
IFHAM Monday, 03 October 2011 02:40 AM
நீங்கள் இஸ்லாத்துக்கு வந்தால் ரொம்ப நல்லா இருக்கும். உங்களைப்போல ஆள்க்கள்தான் எங்களுக்கு தேவை.
Reply : 0 0
Muneer Monday, 03 October 2011 12:23 AM
இவர்தான் இந்தியன் தாத்தாவோ?
Reply : 0 0
Winter Sunday, 02 October 2011 02:22 PM
சிரிப்பதா அழுவதா தெரியல..
Reply : 0 0
Riyasudeen Sunday, 02 October 2011 06:23 AM
வெரி குட் மிஸ்டர் கிரகாம். உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago