2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன்

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29  வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது.

ஆனால், இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் ராதிகா சிற்சபேசனின்  புகைப்படமொன்றை தேடிய ஒருவர் ராதிகாவின் புகைப்படங்களில் ஒன்றை கண்டார். ஆனால் ராதிகாவின் உத்தியோகபூர்வ நாடாளுமன்ற விபரப்பக்கத்தில் அதே படம் மாற்றங்களுடன் காணப்பட்டது.

முந்தைய படத்தில் காணப்பட்ட மார்பகப்பகுதி உத்தியோபூர்வ விபரப்பக்கத்தில் போட்டோஷொப் முறை மூலம் மாற்றப்பட்டிருந்தது.

முதலாவது புகைப்படம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேலைத்தளத்திற்குப் பொருத்தமானதல்ல என கனடாவின் பழைமைவாத அரசியல்வாதிகள் கருதியதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்படி புகைப்படத்தில் மாற்றம் செய்தமை பெண்ணியலுக்கு எதிரானது எனவும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் அவரை குறைந்த பெண்தன்மையாக காட்டுகிறது எனவும் விமர்சகர்கள் சிலர் கூறியுள்ளனர்.

புகைப்படத்தில் மாற்றம் செய்யவேண்டுமென கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சி கோரியதா அல்லது ராதிகாவின் அலுவலகத்தினரோ, கனேடிய நாடாளுமன்ற இணையத்தள நிர்வாகிகளோ இதை செய்வதற்கு தீர்மானித்தார்களா என்பது தெரியவில்லை.


You May Also Like

  Comments - 0

  • siraj Wednesday, 28 September 2011 03:13 AM

    இதுவும் அரசியலுக்கான விளம்பரம்தான்

    Reply : 0       0

    Jeevasuthan Wednesday, 28 September 2011 06:57 AM

    இதெல்லாம் ஒரு pirachaniyappa ......மேர்வின் சில்வா ஏதும் ஐடியா வைத்திருப்பார் கேட்டு பாருங்க.

    Reply : 0       0

    pasha Wednesday, 28 September 2011 02:54 PM

    ஏன் மாற்றி அமைக்க வேண்டும் தேவை என்றால் வேறு படத்தை பாவித்திருக்கலாம் தானே.

    Reply : 0       0

    Shane Wednesday, 28 September 2011 04:58 PM

    என்ன கொடும சார்....

    Reply : 0       0

    kuna Wednesday, 28 September 2011 07:18 PM

    எதைப் பற்றி எல்லாம் கதைக்கிறதென்டு ஒரு விவஸ்தை இல்லாமப் போச்சப்பா... என்ன கொடுமை சரவணா... :P

    Reply : 0       0

    uvais Thursday, 06 October 2011 07:17 PM

    இதெல்லாம் அரசியல் தந்திரம். மக்களால் பேசப்படவேண்டும் என்பதுக்காக அரசியல்வாதிகள் ஒரு புகழ்ச்சிக்காக இப்படியும் செய்வார்கள் தவறுகிடையாது.

    Reply : 0       0

    RISWAN Monday, 24 October 2011 08:40 PM

    இப்போது அரசியல்வாதிகள் நிர்வாணமாக வருகிறார்களே !!!!

    Reply : 0       0

    hutha Saturday, 29 October 2011 05:31 PM

    குட்; நன்றி ,இப்படியல்லாம் ஆராரங்கலோ

    Reply : 0       0

    riya Monday, 31 October 2011 03:12 PM

    முதல் படம் அரசியலுக்கு பின்பு. மற்றது அரசியலுக்கு முன்பு ......ஹி ஹி ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X