2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

ஷாருக்கானுக்கு விமான நிலையத்தில் அபராதம்

Kogilavani   / 2011 ஜூலை 19 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிவூட் நட்சத்திரமான  ஷாருக்கான், லண்டனில் விடுமுறையை கொண்டாடிவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியபோது விமான நிலைய சுங்கப்பிரிவினர் அவருக்கு 1.5 லட்சம் இந்திய ரூபாவை (சுமார் 364,470 இலங்கை ரூபா) அபராதமாக விதித்துள்ளனர்.

லண்டன் மற்றும் நெதர்லாந்திற்கு குடும்பத்தினருடன் சுற்றுலா மேற்கொண்ட ஷாருக்கான்,  கடந்த வியாழக்கிழமை தாயகம் திரும்பினார்.
 
லண்டனில் ஷாருக் குடும்பத்தினர் அதிக ஷொப்பிங் செய்திருப்பார்கள் போலும். அவர்கள்  சுமார்  20 பெட்டிகளில் அப்பொருட்களை  கொண்டு வந்துள்ளனர்.

மும்பை சத்ரபதி சிவாஜி தேசிய விமானநிலையத்தில் இவர்கள் வந்திறங்கிய போது, சுங்க அதிகாரிகள் அளவுக்கதிமான  பெட்டிகளில் சந்தேகம் கொண்டு சோதனை நடத்தினர். அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக பொருட்களை கொண்டு வந்த காரணத்தினால் ஷாருக்கான் குடும்பத்தினருக்கு ஒன்றரை லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

ஷாருக்கின் குடும்பத்தினரை செல்ல அனுமதித்த சுங்க அதிகாரிகள், ஷாருக்கானுக்கு தண்டப்பணம்  செலுத்தினால் மட்டுமே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்க முடியுமெனத் தெரிவித்தனர். அதற்கு சம்மதம் தெரிவித்து ஷாருக்கான் மேற்படி அபராதப் பணத்தை செலுத்தினார்.

இச்சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்கள், சாருக்கானுக்கு விமானநிலையத்தில் விசேடமாக எந்த சலுகையும் வழங்கப்படவில்லையென்றும் குறிப்பாக தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்துவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • asker Wednesday, 20 July 2011 03:59 PM

    காரணம் அவர் ஒரு முஸ்லிம்.

    Reply : 0       0

    Nilavan Wednesday, 20 July 2011 07:14 PM

    அஸ்கர்... கருப்பு கண்ணாடி போட்டு பார்த்தால் எல்லாம் இருட்டாகத்தான் இருக்கும்... முயன்றால் திருந்தலாம்...

    Reply : 0       0

    jam Friday, 22 July 2011 01:53 PM

    ஹலோ Asker,

    இவரெல்லாம் உங்களுக்கு முஸ்லிமா, போய் சாருக்கான் படம் பார்த்து காலத்த கடத்து ராஜா .

    Reply : 0       0

    riyas Saturday, 23 July 2011 06:08 AM

    அஸ்கர் முஸ்லிம் பெயர் உள்ள அனைவரும் முஸ்லிம் ஆக முடியாது

    Reply : 0       0

    Mohd- Qatar Sunday, 24 July 2011 04:43 PM

    தம்பி அஸ்கர் கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்க, முஸ்லிம் என்றால் யார் தெரியுமா? அதை படித்து விட்டு உங்களது கருத்துக்களை எழுத்துங்கள், எந்த விடயத்தையும் ஆற அமர்ந்து யோசித்து பேசுங்கள். இனி மேலாவது சுயமாக சிந்தியுங்கள்.

    Reply : 0       0

    hrish Sunday, 24 July 2011 07:16 PM

    ஹலோ அஸ்கர் இந்த விடயத்துக்கும் இனவாதம் தேவைதானா?

    Reply : 0       0

    mama Thursday, 04 August 2011 03:12 PM

    எல்லாமே பணத்துக்குத்தான் செய்றாங்க

    Reply : 0       0

    asker Thursday, 11 August 2011 10:32 PM

    சற்று சிந்தியுங்கள் ...... பெயரில் உள்ளவரும் எவரும் முஸ்லிம் இல்லை உண்மைதான். இந்தியாவில் அது நிறையவே உள்ளது ...உதாரணம் சல்மான் கான் என்ன நடந்தது......வேட்டையாடியதற்கு மன்னிப்பு இல்லை ......முகமத் அசாருதீன் மாத்திரமா சூதாட்டத்தில் சிக்கினார் இஅவருக்கு மட்டும் ஏன் கடுமையான தண்டனை? நான் சுயமாகத் தான் சிந்திக்கிறேன். முகமத் கத்தார் அவர்களே.....மும்பை நகருக்கு ஒரு தடவை பொய் பாருங்கள் .உங்கள் அனைவருக்கும் தெரியும் ......நான் கூறியது பிழையாக இருந்தால் மன்னிக்கவும்.

    Reply : 0       0

    sharmee Tuesday, 23 August 2011 11:19 PM

    காசி கூடுதலாக இருந்தால் அப்படித்தான்.

    Reply : 0       0

    Shifaz Friday, 26 August 2011 11:09 PM

    அவர் முஸ்லிம் அல்ல , முஸ்லிம் சாயம் பூசியவர்

    Reply : 0       0

    noom Wednesday, 31 August 2011 04:21 AM

    டிஉடி கட்டுவது ஒன்றும் குற்றம் இல்லையே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X