Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஜூலை 18 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
இலங்கையின் பிரபல குறுந்தூர ஓட்ட வீரர்களில் ஒருவரான ரங்க விமலவன்ஸவை மற்றொரு நபருக்கு அமெரிக்க விசா பெற்றுத்தருவதாகக் கூறி, 16 லட்சம் ரூபா மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக இம்மாதம் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அமெரிக்க விஸாவொன்றை பெறுவதற்காக தானும் தனது கணவரும் மேலும் இரு நண்பர்கள் சகிதம் சந்தேக நபரை சந்தித்ததாகவும் 2006 ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு 24 லட்சம் ரூபாவை வழங்கியதாகவும் பெண்ணொருவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபருக்கு தனது கணவர் பணம் வழங்கிய போதிலும் சந்தேக நபர் வாக்குறுதியளித்தபடி, விஸா பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் பின்னர் 8 லட்ச ரூபாவை மாத்திரம் சந்தேக நபர் திருப்பிக் கொடுத்ததாகவும் என அப்பெண் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான ரங்க விமலவன்ஸ ,கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயதிலக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சந்தேக நபர் இவ்வாறான மேலும் 3 சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். அதையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
31 வயதான ரங்க விமலவன்ஸ தெற்காசிய விளையாட்டுவிழாவில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago