2024 நவம்பர் 23, சனிக்கிழமை

பணிப்பெண்ணின் குழந்தைக்கு தானே தந்தையென ஒப்புக்கொண்டார் ஆர்னோல்ட்

Super User   / 2011 மே 18 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹொலிவூட் திரையுலகின் பிரபல நடிகரும் கலிபோர்னியா மாநில முன்னாள் ஆளுநருமான ஆர்னோல்ட் ஷ்வார்ஸ்நெகர் 10 வருடங்களுக்கு முன் தனது வீட்டின் பணிப்பெண் ஒருவருடன் உறவுகொண்டு குழந்தையொன்றுக்கு தந்தையாகியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

63 வயதான ஆர்னோல்ட் 2003 ஆண்டுமுதல் கடந்த ஜனவரி மாதம் வரை கலிபோர்னியா ஆளுநராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆவர் ஆளுநராக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் மேற்படி குழந்தை பிறந்தாக தெரிவிக்கப்படுகிறது.

10 வருடங்களுக்கு முன் நடந்த இச்சம்பவம் குறித்து கடந்த ஜனவரி மாதம் தனது ஆளுநர் பதவிக்காலத்தை பூர்த்தி செய்தபின் தனது மனைவி மரியா ஷ்ரீவரிடம்  ஆர்னோல்ட் தெரிவித்தாராம்.

25 வருடகாலம் தம்பதிகளாக வாழ்ந்த ஆர்னேர்ட்டும் மரியாவும் பிரிந்து செல்வதாக கடந்த 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். ஆனால் இவ்வருட முற்பகுதியிலேயே ஆர்னோல்ட்டின் வீட்டிலிருந்து மரியா வெளியேறினார். ஆர்னோல்ட்டின் முறையற்ற உறவு விவகாரமே அவரைவிட்டு மரியா பிரிவதற்கு காரணம் என நம்பப்படுகிறது.

இத்தம்பதிகளுக்கு 4 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விவகாரம் குறித்து ஆர்னோல்ட் ஸ்வார்ஸ்நெகர் கூறுகையில், சுமார் ஒரு தசாப்த காலத்தின் முன் நடந்த இச்சம்பவம் குறித்து ஆளுநர் பதவியிலிருந்து விலகியபின்  நான் எனது மனைவியிட் கூறினேன்.

இதனால் ஏற்படக்கூடிய கோப மற்றும் ஏமாற்ற உணர்வுகளை புரிந்துகொள்கிறேன். அதற்கு மன்னிப்பில்லை. நான் ஏற்படுத்திய காயத்திற்கு முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.  மரியா, எனது பிள்ளைகள் மற்றும் எனது குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பட்ரீஷியா பியனா எனும் பெண்ணுடனே ஆர்னோல்ட்டுக்கு முறையற்ற உறவு இருந்தமை அம்பலமாகியது. தற்போது 50 வயதான பியன்னா 20 வருடகாலம் ஆர்னேல்ட்-மரியா தம்பதியின் வீட்டில் பணியாற்றியவர்.
தற்போது அவர் ஆர்னோல்ட்டின் மகனுடனும் தனது ஏனைய 3 பிள்ளைகளுடனும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வெளியே வசித்து வருகிறார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Thursday, 19 May 2011 09:31 PM

    அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தகுதி ஒன்று அதிகரித்துவிட்டது, அமெரிக்க ஜனாதிபதியாக இவருக்கு ஆசை உண்டு என்று சில காலங்களுக்கு முன் ஊடகங்கள் பறையடித்தன.

    Reply : 0       0

    ibnuaboo Saturday, 21 May 2011 04:21 AM

    அமெரிக்க ஜனாதிபதியாவதற்கான தகுதிகளில் இதுவும் ஒன்று?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X