Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மே 08 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அல் குவைதா தலைவர் ஒசாமா பின் லாடன் இளம் பருவத்தில் தன்னிடம் ஜூடோ கற்றுக்கொண்டதாக தாய்வானைச் சேர்ந்த ஜூடோ பயிற்றுநரான ஜிம்மி வூ கூறுகிறார்.
1980களின் முற்பகுதியில் தான் சவூதி அரேபியாவின் தேசிய ஜூடோ பயிற்றுநராக பணியாற்றியதாக கூறும் ஜிம்மி, அக்காலத்தில் ஒசாமா பின் லேடனுக்கும் ஜூடோ கற்பித்தாக ராய்ட்டர்ஸ் செய்தியாளருக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் ஜிம்மி வூ வெளியிட்டுள்ளார். அப்படங்களில் காணப்படும் தாடிவைத்த கவர்ச்சியான ஓர் இளைஞர்தான் ஒசாமா பின் லாடன் என்கிறார் ஜிம்மி.
ஆனால் புகைப்படங்களிலுள்ள அந்த இளைஞர் ஒசாமா பின் லேடனா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
ஒசாமா என ஜிம்மி கூறும் அந்த இளைஞர் அப்புகைப்படங்களில் ஏனையோரைவிட அதிக உயரமானவராக காணப்படுகிறார். ஒசாமா பின் லேடன் மிக உயரமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் உயரத்தைவிட ஈடுபாட்டினாலேயே ஒசாமா தனித்து தென்பட்டார் என்கிறார் ஜிம்மி. இவர் 1981 முதல் 1991 ஆம் ஆண்டுவரை சவூதி அரேபியாவின் தேசிய அணி பயிற்றுநராக கடமையாற்றியவராம்.
அப்போது பல்கலைக்கழக மாணவராக இருந்த ஒசமா பின் லேடன் வாரத்தில் 3 நாட்கள் ஜூடோ கற்றுக் கொள்ள வருவாராம்.
'பின் லேடன் 6 அடி 4 அங்குல உயரமானவராக இருந்தார். ஜூடோவுக்கு அவ்வளவு உயரம் பொருத்தமானதல்ல. அதனால் அந்த விளையாட்டை கைவிடும்படி நான் ஆலோசனை வழங்கினேன். எனினும் பின் லேடன் வற்புறுத்தியதால் அவரை பயிற்சிகளில் சேர்த்துக்கொண்டேன்' என் ஜிம்மி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, "அந்த காலத்தில் அவரின் பெயர் பின் லேடன் என்று எனக்குத் தெரியாது. செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர் நான் ஒரு கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்ததேன். அங்கு எனது முன்னாள் மாணவர்கள் சிலர் 'ஜிம்மி, ஒசாமா எங்கள் ஹீரோ' என்றனர். அப்போது நான் சில புகைப்படங்களைப் பார்த்தேன். அட இந்த இளைஞனா என ஆச்சரியமடைந்து அவரின் ஞாபகங்களை மீட்ட ஆரம்பித்தேன்" என்கிறார் ஜிம்மி.
"ஒரு தடவை எனது மனைவி பயிற்சி நிலையத்திற்குள் நுழைந்தபோது, அங்கு பெண்கள் வரக்கூடாது என உயரமான அந்த இளைஞர் கூறியது நன்றாக நினைவில் உள்ளது" என்கிறார் அவர்.
1984 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒசாமாவை தான் ஒருபோதும் சந்திக்கவில்லை எனவும் ஜிம்மி கூறியுள்ளார்.
Thilak Monday, 09 May 2011 01:35 AM
உயரமும் மூக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் ஒரு வாரத்திற்கு முன்னர் ஜிம்மி வூ இதை கூறியிருந்தால் சிலவேளை ஒசமாவே பதில் சொல்லியிருக்ககக்கூடுமே.
Reply : 0 0
shafir Monday, 09 May 2011 04:33 PM
சந்தேகமே இல்லை... ஒசாமா தான்...
Reply : 0 0
Lankan Monday, 09 May 2011 07:00 PM
அவனுக்குத்தான் தெரியும் ஒரு ஆரம்பமும் அதன் முடிவும் வேறு யாருக்கம்மா புரியும் அதன் வேடிக்கையும் அதன் விளைவும்.
Reply : 0 0
shakir Tuesday, 31 May 2011 04:48 PM
உலகில் எத்தனை உசாமாக்கள் இருப்பினம் .. இது சின்ன புள்ள தனமா இல்லை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago