Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 27 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் சினிமா நடிகை மஹிமா சௌத்திரி ஈவ் டீஸிங் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்ற சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
37 வயதான நடிகை மஹிமா, ஜாம்ஷெட்பூர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றுக்கு போதிய பாதுகாப்பின்றி சென்றிருந்தார்.
இந்நிலையில் சில ஆண்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க முயன்ற அவரால் அங்கிருந்து ஓடவும் முடியவில்லை. அங்கிருந்த சில புகைப்பட செய்தியாளர்களும் வர்த்தக சம்மேளன அதிகாரி ஒருவரும் நடிகையின் உதவிக்கு வந்ததுடன் போக்குவரத்து பொலிஸ் இன்ஸ்பெக்டரான திலீப் குமார் சிங்கிடம் இது தொடர்பாக புகாரிட்டனர்.
அதையடுத்து மேற்படி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனது மோட்டார் சைக்கிளில் நடிகை மஹிமா சௌத்திரியை அங்கிருந்து ஏற்றிச்சென்றார்.
அவரை நான் இதற்குமுன் பார்த்ததில்லை. அவர் யார் என்றும் தெரியாது. ஆனால் இப்பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் நான் எனது மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச்சென்றேன்' என இன்ஸ்பெக்டர் திலீப் குமார் சிங் கூறியுள்ளார்.
xlntgson 0776994341 Wednesday, 30 March 2011 09:01 PM
அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக செய்தி வராமல் இருந்தால் சரி, இந்திப் படங்களில் வருவது மாதிரி!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago