2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

தொலைபேசிகளுக்கு தடை விதித்த நடிகர்

Super User   / 2010 நவம்பர் 28 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது வீட்டில் தொலைபேசிகள் ஒலிக்கவே கூடாது என கட்டளையிட்டுள்ளார் அமெரிக்க நடிகர் ஜொனி டெப். பிறரின் தொந்தரவின்றி குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதே இதன் நோக்கமாம்.
 
47 வயதான ஜொனி டெப் பிரெஞ்சு பாடகியும் நடிகையுமான வனேஸா பரடிஸுடன் பல வருடங்களாக இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸிலுள்ள இத்தம்பதியின் ஆடம்பர வீட்டில்தான் தொலைபேசிகளுக்குத் தடை விதித்துள்ளார் ஜொனி.

'பிரான்ஸிலுள்ள வீட்டிற்கு நான் எப்போது சென்றாலும் எனது தொலைபேசியை துண்டித்துவிடுவேன். அங்கு நான் தொலைபேசி அழைப்பு மணி ஒலிப்பதை கேட்டதே இல்லை. வனேஸாவும் இதை உறுதிப்படுத்துகிறார். அந்த வீட்டில் தொலைபேசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என ஜொனி டெப் தெரிவித்துள்ளார்.

'நாம் அழகான வாழ்க்கை வாழ்கிறோம். பிரான்ஸில் நேரத்தை செலவிடுவது என்னை அமைதிப்படுத்துவதுடன் அவ்வளவு முக்கியமில்லாத விடயங்கள் குறித்து கவலைப்படுவதையும் தடுக்கிறது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X