Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் பிரபல பொப்பிசைப் பாடகியும் நடிகையுமான கிறிஸ்டினா அகியுலேரா , தனது திருமண வாழ்க்கை முறிவடைந்துவிட்டதாக பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
29 வயதான கிறிஸ்டினா , Xtina என்ற பெயரிலும் அறியப்பட்டவர்.
அவர் 5 வருடங்களுக்குமுன், இசை அல்பங்களை சந்தைப்படுத்தும் நிறுவனமொன்றின் நிறைவேற்றதிகாரியான ஜோர்டான் பிரட்மனை திருமணம் செய்திருந்தார்.
இத்தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகனும் உண்டு. இத்தம்பதியின் திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என இவ்வார ஆரம்பத்தில் தவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தமது திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என கடந்த செவ்வாயன்று கிறிஸ்டினா அகியுலேரா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
'நானும் ஜோர்டானும் பிரிந்துவிட்டாலும் எமது மகன் மார்ஸ் நலன்களில் இருவரும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவோம்' என கிறிஸ்டினா அகியுலேரா அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
ஜோர்டான் பிரட்மனை திருமணம் செய்வதற்குமுன் கிறிஸ்டினா 1999 இல் கார்சன் டெய்லி என்பவரை காதலித்ததாக பரவலாக பேசப்பட்டது. பின்னர் அவர் நடனக்கலைஞர் ஜோர்ஜ் சன்டோஸ் என்பவருடன் நெருக்கமாக காணப்பட்டார்.
2005 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஜோர்டான் பிரட்மனுக்கும் அவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று அவ்வருடம் நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago