Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய அரசகுடும்பத்தைச் சேர்ந்த இளவரசி பியட்ரிஸ், ஓட்டிச் சென்ற கார் பாரிய விபத்தொன்றில் சிக்கியதால் அவர் கண்ணீர் விட்டு அழுதார்.
22 வயதான இளவரசி பியட்ரிஸ், 5 ஆவது முடிக்குரிய வாரிசு என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பி.எம்.டபிள்யூ. காரை கடந்த திங்கட்கிழமை அவர் ஓட்டிச் சென்றபோது பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சில மீற்றர்கள் தொலைவிலுள்ள சுற்றுவட்டமொன்றில் அக்காருடன் முன்னும் பின்னும் இரு பஸ்கள் மோதின.
இதனால் காரின் முன்புறமும் பின்புறமும் பலத்த சேதத்திற்குள்ளாகின.
காரிலிருந்து பியட்ரிஸும் அவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் காயமின்றி வெளியேறினர்.
எனினும் பரபரப்பான அவ்வீதியில் இளவரசி பியட்ரின் அச்சமடைந்தவராக கண்ணீருடன் காணப்பட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அவர் தனது பெற்றோருக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பின் மற்றொரு வாகனம் அவருக்காக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago