Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானிய நகைச்சுவை நடிகரான மைக்கல் மெக்கிள்ன்டயர் சுயசரிதை நூலொன்றை எழுதியுள்ளார். தான் கன்னித்தன்மையை இழந்த கதையையும் சுவாரஷ்யமாக இந்நூலில் விபரித்துள்ளார் 39 வயதான மைக்கல்.
பதின்மர் பருவத்தில் பிரான்ஸின் கலாய்ஸ் நகரில் வைத்து தான் கன்னித்தன்மை இழந்தாக குறிப்பிட்டுள்ள மைக்கல், அக்காலத்தின் பெண்களுடன் தனக்கு தொடர்பில்லாததால் தான் காதலித்த பெண்ணை சந்திக்கச் சென்றபோது தனது நண்பர் பெண்கள் பற்றி தனக்கு உபதேசித்ததுடன் பெண்களின் உடற்பாகங்கள் குறித்த வரைபடமொன்றையும் தனக்காக வரைந்து கொடுத்ததாக கூறியுள்ளார்.
அவ்வரைபடத்தை தனது காற்சட்டை பொக்கற்றில் வைத்துக்கொண்டே தான் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு மைக்கல் மெக்கிள்ன்டயர் சென்றாராம்.
'வாழ்கையும் சிரிப்பும்: எனது கதை' என்ற தலைப்பிலான இந்நூல் இன்று வியாழக்கிழமை வெளியாகிறது. அதன் சில பகுதிகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.
மேற்படி சம்பவம் பற்றி மைக்கல் கூறுகையில்,
"எனக்கு 16 வயதாக இருந்தபோது பெண்களை எப்படி கவர்வது என்பதை நான் அறிந்திருக்கவில்லை. எனது ஆடைகளும் எனது முகத்தில் இருந்த புள்ளிகளும்தான் பிரச்சினையாக இருந்தன. வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன.
ஆனால், விடுமுறைகளின்போது இப்பிரச்சினை காணாமல் போய்விடும்.
நான் விடுமுறையொன்றுக்காக மால்டாவுக்குச் சென்றபோது பிரெஞ்சு யுவதியொருவரை சந்தித்தேன். அவளின் பெயர் சான்ட்ரின். வெளிச்சத்தில் அவள் நியாயமானளவு அழகாக இருந்தாள். வெளிச்சமில்லாதபோது மேலும் அழகாக இருந்தாள். அவளும் கன்னிப்பெண்தான்.
அன்றிரவு மால்டா கடற்கரையில் நாம் குதூகலமாக இருந்தோம். நாம் விடைபெறும்போது, அவள் கலாய் நகரில் வசிப்பவள் என்பதை அறிந்துகொண்டேன்.
அது எனக்கு மகிழ்ச்சியான தகவலாக இருந்தது. நாட்டிற்குத் திரும்பும் வழயில் மால்டா துறைமுகத்திற்கூடாகத் தான் செல்லவேண்டியிருந்தது. எனவே நானும் எனது நண்பர் சாம் சகிதம் சான்ட்ரினாவின் வீட்டுக்குச் செல்லத் தீர்மானித்தோம்.
அவளுடன் நன்றாக பேசுமாறு சாம் ஆலோசனை கூறியிருந்தார். சொல்வதற்குச் சங்கடம் என்றாலும் பெண்களின் உடற்பாகங்கள் குறித்த விபரங்களை வரைபடமாக எனக்கு வரைந்துகொடுத்திருந்ததார் சாம்.
கலாயிஸ் ரயில் நிலையத்தில் சான்ட்ரினாவின் பெற்றோர் வந்து எம்மை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவ்வீட்டில் சான்ரினாவைவிட அழகான பெண்ணொருவர் இருந்தார். சாம் அவளை கவர்ந்து சென்றுவிட்டார்.
பின்னர், சான்ட்ரினாவின் பெற்றோரும் வெளியே போய்விட்டனர். அப்போது நானும் சான்ரினாவும் மட்டுமே வீட்டில் இருந்தோம். அவள் எனக்கு வீட்டைச் சுற்றிக் காட்டினாள். அவளின் படுக்கை அறையை அழகாக அலங்கரித்திருந்தாள்.
நாம் அங்கு தழுவிக்கொண்டோம். சாம் கொடுத்த வரைபடம் பொக்கட்டில் இருந்தது. அவளை புகழ்வதற்காக உனக்கு மிக அழகான... என்று சொல்லிவிட்டு அவள் உடலில் மிக அழகாக என்ன இருக்கிறது என்று தேடினேன். அவள் கால்கள் அழகாக இருந்தன.
ஆனால் ஒரு காலில் அவலட்சணமான புள்ளியொன்றிருந்தது. எனவே கால்கள் என்பதற்குப் பதிலாக, கால் என்று சொல்லலாமா என்று யோசித்தேன்.
ஒரு காலை மட்டும் அழகு என்று சொல்வது சங்கடமாக இருந்தது. எனவே அந்த அறையை நோட்டமிட்டுவிட்டு, 'உனக்கு மிக அழகான அறை இருக்கிறது' என்று அந்த வசனத்தை முடித்தேன்" என்று விபரித்துச் செல்கிறார் மைக்கல்.
xlntgson Saturday, 16 October 2010 10:01 PM
பெண்கள்தாம் கன்னித்தன்மை இழப்பர், ஆண்கள் இழப்பது கண்ணன் அல்லது கன்னர் தன்மையோ? முதன் முறையாக உறவு கொண்டமை என்பதுதான் இதுகாலம் வரை வழமையில் இருக்கும் வழக்கு என்று நினைக்கின்றேன். பிரமச்சரியம் கலைந்தமை என்றும் கூறலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago