Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூஸிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண்களுக்காக நடத்தப்பட்ட அழகுராணிப் போட்டியில் வெற்றி பெற்ற யுவதியொருவர் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
அந்த யுவதி இந்திய தோற்றத்துடன் இல்லை என்பதே இதற்குக் காரணம்.
22 வயதான ஜெஸிக்கா லால் என்பவர் வெள்ளைத் தோலுடனும் பொன்னிற தலைமயிருடனும் காணப்படுகிறார்.. இவர் இந்திய பெண் போன்று இல்லை. இவர் போட்டியில் பங்குபற்ற அனுமதிக்கப்பட்டது தவறு என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அவர் அழகுராணி போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ஜெஸிக்கா, நியூஸிலாந்தைச் சேர்ந்த தாய்க்கும் இந்திய-பிஜி கலப்பு கொண்ட தந்தைக்கும் பிறந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் வெலிங்டன் மாவட்ட மிஸ் இந்தியா நியூஸிலாந்து போட்டியில் பங்குபற்றி தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவானவர் இவர்.
ஜெஸிக்கா குறித்து இரண்டு அல்லது மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இப்போட்டி முடிந்த பின்னர் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தன்னை விமர்சிப்பவர்கள் குறுகிய மனம் கொண்டவர்கள் எனக் கூறும் ஜெஸிக்கா, 'நியூஸிலாந்தில் வசிக்கும் பல இந்தியர்கள் என்னை போட்டியில் கலந்துகொள்ளுமாறு உற்சாகமளித்தனர். அவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர்' என்கிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago