2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

நடிகர் சஞ்சய் தத்திற்கு 5 வருட சிறை

Super User   / 2013 மார்ச் 21 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய நடிகர் சஞ்சய் தத்திற்கு ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை இந்திய உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு மும்பையில் 12 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நடத்தினர். அதில் 257 பேர் கொல்லப்பட்டதோடு 713 பேர் படுகாயமடைந்திருந்தனர். இக் குண்டுகள் வெடித்ததில் 28 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான சொத்துகளும் சேதமடைந்தன.
 
இந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாக தாவூத் இப்ராஹிம், டைகர் மெமோன், அவனது தம்பி ஐயூப் மெமோன் ஆகியோர் உட்பட 100 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.சதாசிவம் மற்றும் சௌகான் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
 
1993ஆம் ஆண்டு குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான யாகுப் மேனனின் தூக்கு தண்டனையை உறுதி செய்யப்பட்டது.
 
ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு தடா நீதிமன்றம் வழங்கிய 6 ஆண்டுகள் சிறை தண்டனையை 5 வருடங்களாக குறைத்தது. இவர் 18 மாதங்களை சிறையில் கழித்துவிட்டார். இதனால் மீதி காலத்தை மட்டும் இவர் சிறையில் கழிப்பார். இவர் 4 வார காலத்தில் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .