2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

மே 5ஆம் திகதி விடுதலையாகிறார் ஆசிப்

A.P.Mathan   / 2012 மே 01 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பொட் ஃபிக்சிங் குற்றத்தில் ஈடுபட்டமைக்காக இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானிய அணி வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆசிப், எதிர்வரும் 5ஆம் திகதி தனது தண்டனைக்காலம் நிறைவடைந்து விடுதலை செய்யப்படவுள்ளார்.

2010ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் அவ்வணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக மொஹமட் ஆசிப் மற்றும் மொஹமட் ஆமிர் ஆகியோரோடு, அவர்களோடு இணைந்து செயற்பட்ட அணித்தலைவர் சல்மான் பட் ஆகியோர் பணத்தைப் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே "நோ போல்"களை வீசியமைக்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக சர்வதேசக் கிரிக்கெட் சபை குறித்த மூன்று வீரர்களுக்கும், போட்டிகளில் பங்குபற்றுவதற்கான தண்டனையை விதித்தது.

எனினும் குறித்த குற்றம் இங்கிலாந்தில் இடம்பெற்றதன் காரணமாக இங்கிலாந்தில் இம்மூன்று வீரர்கள் மீதும் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மூவருக்கும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டன. சல்மான் பட் இற்கு 30 மாதங்களும், மொஹமட் ஆசிப் இற்கு 12 மாதங்களும், மொஹமட் ஆமிருக்கு 6 மாதங்களும் விதிக்கப்பட்டன.

இங்கிலாந்து வழக்கங்களின் படி அரைவாசித் தண்டனைக்காலத்தைப் பூர்த்தி செய்ததன் பின்பு குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதன் காரணமாக, 3 மாதங்களின் பின்பு மொஹமட் ஆமிர் விடுவிக்கப்பட்டார். தற்போது மொஹமட் ஆசிப் தனது 6 மாத காலத் தண்டனையை நிறைவுசெய்துள்ளதன் காரணமாகவே விடுவிக்கப்படவுள்ளார்.

மே 5ஆம் திகதி தனது தண்டனைக்காலத்தைப் பூர்த்தி செய்து மொஹமட் ஆமிர் விடுவிக்கப்படுவார் எனத் தெரிவித்த ஆசிப் இன் வழக்கறிஞர், அவரை விடுதலை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன எனத் தெரிவித்தார்.

மொஹமட் ஆசிப் அதன் பின்னர் எப்போது பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்பது குறித்த முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்ற போதிலும், விடுவிக்கப்பட்டவுடன் மொஹமட் ஆசிப் பாகிஸ்தானுக்கு திரும்புவதை விரும்புவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X