2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

சேக்ஷ்பியரின் 450வது பிறந்த நாள்

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


'சிலர் பிறக்கும் போதே பெருமைக்குரியவர்களாக பிறக்கின்றனர், சிலர் பெருமையை தேடிக்கொள்வார்கள், சிலரை பெருமை தேடி வரும்' இது வில்லியம் சேக்ஷ்பியரின் வாக்கியமாகும். சேக்ஷ்கியரின் மேற்கூறப்பட்ட வாக்கியங்கள் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமாக அமையும்.

ஏப்ரல் 23 சேக்ஷ்பியரின் 450வது பிறந்த நாளாகும்.வரலாற்று சிறப்புமிக்க சேக்ஷ்பியரின் எழுத்துக்கள் இன்றுவரை போற்றப்படுகின்றன. இவர் ஆங்கில நாடகத்துறையை மாற்றியமைத்தவர். ஏன் ஆங்கில மொழியைக் கூட மாற்றி செம்மைப்படுத்தியவர்.

சேக்கஷ்பியர் 1700 ஆங்கில சொற்களை புதிதாக உருவாக்கியவர். உதாரணமாக ஊசவைiஉளஇ பழளளipஇ யனஎநசவளைiபெ ஆகிய சொற்களை சேக்ஷ்பியரே உருவாக்கியவர்.

சேக்ஷ்பியர் பற்றி பேராசிரியர் ஸ்ரான்லி வெல்ஸ் இவ்வாறு கூறுகின்றார்,

ஆங்கிலத்தில் சேக்ஷ்பியரால் ஆக்கப்பட்ட சொற்றொடர்கள் பல உள்ளன. எமது அழகான உணர்வுகளைக் கூட்டி தெளிவாகக் வெளிப்படுத்த அவரது சொற்றொடர்களை எமக்கு வழங்கினார்.

சேக்ஷ்பியர் எல்லா நிலைமையிலும் பொருந்துவார், 'நீங்கள் காதலில் வீழ்ந்திருந்தால், பொறாமை உங்களை ஆட்கொண்டிருந்தால், சாதிக்க வேண்டுமெனும் வெறி உங்களுக்குள்ளிருந்தால், இறந்து போன நண்பனுக்காக நீங்கள் அழுதிருந்தால் அல்லது உங்களுக்கு நடக்கவிருக்கும் நல்ல காரியம் பற்றி நீங்கள் பூரித்துப் போனால், இவ்வேலைகள் எல்லாவற்றிலும் சேக்ஷ்பியரை உங்களுக்கு பொருத்தமானவாராக காண்பீர்கள்.

சேக்ஷ்பியர் தனது பிரார்த்தனைகளை விமர்சிக்கவில்லை. அவர் தனது படைப்பு ஊடாக புத்திகூறவோ தனது கருத்தை திணிக்கவோ இல்லை.

இவரது பாத்திரங்கள் கறுப்பு, வெள்ளையாக அமையவில்லை. அவை சிறப்பான பண்புகளையும் குறைப்பாடுகளையும் கொண்டவையாக காணபபட்டன.

பிரித்தானிய கல்வித்திட்டத்தில் சேக்ஷ்பியருக்கு கருத்து பலம் பெற்று வருவதுடன் செப்டெம்பர் 11 - 14 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் குறைந்த பட்டம் சேக்ஷ்பியரின் இரண்டு நாடகங்களையாவது படிக்க வேண்டும் என புதிய கலைத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X