2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

82 வயதான கோடீஸ்வரர் ஜோர்ஜ் சோரெஸ் 3ஆவது திருமணம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


பங்குச்சந்தை உலகில் பலராலும் அறியப்பட்ட ஜோர்ஜ் சோரெஸ் தனது 82 ஆவது வயதில் 3ஆவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.

நியூயோர்க்கில் வசிக்கும் ஜோர்ஜ் சோரெஸ் கோடிக்கணக்கான சொத்துகளுக்கு உரிமையானவர். 'ஷேர் மார்க்கெட் கிங்' என்று புகழ்பெற்ற இவர் 40 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தமிகோ போல்டன் என்ற அந்த பெண் சுகாதார ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். ஜோர்ஜ் சோரெஸிக்கு இது மூன்றாவது
திருமணம். போல்டனுக்கு இது இரண்டாவது திருமணம்.

அண்மையில்  82வது பிறந்தநாள் கொண்டாடிய போது சோரெஸ் தனது மூன்றாவது திருமணம் பற்றி அறிவித்தார். சோரெஸின் இரண்டாவது திருமணம் 1990 இல் நடந்தது. அந்த திருமணத்தின் மூலம் அவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. சோரெஸிற்கு 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (தட்ஸ் தமிழ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .