2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

உலகில் அதிக சக்தி வாய்ந்த 20 அன்னையர்கள்

Super User   / 2012 மே 13 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகில் அதிக சக்திவாய்ந்த 20 அன்னையர்களின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்பட்டியலில், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன்  முதலிடம் வகிக்கிறார். 64 வயதான ஹிலாரி கிளின்டன்  செல்ஷியாவின் தாயார் ஆவார்.

64 வயதான பிரேஸில் ஜனாதிபதி டில்மா ரௌசெல்வ் இரண்டாவது இடத்தில் உள்ளார். பெப்சி நிறுவனத்தின் தலைவியான இந்திரா நூயி 3 ஆம் இடத்திலுள்ளார். இந்திரா காங்கிரஸ் கட்சியின்தலைவியான சோனியாக காந்தி 6 ஆவது இடத்திலுள்ளார்.

20 ஆவது இடத்தில் பர்மாவின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவி ஆங் சான் சூகி 20 ஆவது இடத்தில் உள்ளார்.
இப்பட்டியிலில் இடம்பெற்றுள்ள அன்னையர்களின் விபரம் பின்வருமாறு:

1.    ஹிலாரி கிளின்டன் (64) அமெரிக்க ராஜாங்க செயலார்.
2.    டீல்மா ரௌசெல்வ் (64) பிரேஸில் ஜனாதிபதி
3.    இந்திரா நூயி (56) பெப்சி நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி
4.    ஷெரில் சாண்ட்பேர்க் (42) பிரதம செயற்பாட்டு அதிகாரி பேஸ்புக்.
5.    மேலிண்டா கேட்ஸ் (47) பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்
6.    சோனியா காந்தி (65) இந்திரா காங்கிரஸ் கட்சி  தலைவி.
7.    மிட்செல் ஒபாமா (48) அமெரிக்க முதற் பெண்மணி
8.    கிறிஸ்டைன் லகார்ட் (58) சர்வதேச நாணய நிதிய பிரதம நிறைவேற்று அதிகாரி
9.    இரேன் ரொஷென்பெல்ட் (59) பிரதம நிறைவேற்று அதிகாரி – கிராவ் பூட்ஸ் (அமெரிக்கா).
10.   ஜில் அப்ராம்ஸன் (58) நியூயோர்க் டைம்ஸ் நிறைவேற்றதிகார ஆசிரியர் .
11.  கத்லீன் செபலியஸ் (63) அமெரிக்க சுகாதார, மனித சேவைகள் செயலர்.
12.    சுசான் வோஜ்சிக்கி  (43) கூகுள் நிறுவன உபதலைவி
13.    கிறிஸ்டைன் பெர்னாண்டஸ் (59) ஆர்ஜென்டீன ஜனாதிபதி
14.    பெயோன்ஸ் நொவல்ஸ் (30) பாடகி (அமெரிக்கா)
15.    ஜோர்ஜினா ரைன்ஹார்ட் (58) சுரங்கத் தொழிலதிபர் (அவுஸ்திரேலியா)
16.    செர் வாங் (53) வி.ஐ.ஏ. டெக்னோலஜிஸ் நிறுவனத் தலைவி (தாய்வான்)
17.    மார்கரட் ஹம்பர்க் (56) அமெரிக்க உணவு, மருந்துகள் ஆணையாளர்
18.    மேரி ஷாப்பிரோ (56) அமெரிக்க பிணையங்கள், பரிவர்த்தனை ஆணைக்குழு தலைவி
19.    ஆன் ஸ்வீனி (54) டிஸ்னி ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத் தலைவி (அமெரிக்கா)
20.    ஆங் சான் சூகி (66) ஜனநாயகத்திற்கான தேசிய லீக் தலைவி (பர்மா)


You May Also Like

  Comments - 0

  • sutha Wednesday, 16 May 2012 03:36 PM

    எமது நாட்டின் முதல் பெண்மனி இதில் போட்டியிடவில்லையா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X