Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 23, சனிக்கிழமை
Super User / 2011 ஜூலை 05 , மு.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
விமானம் தாமதமானதால் கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதிய காற்றோட்டமில்லாத அறையொன்றில் 11 மணித்தியாலங்கள் தவிக்க வேண்டிய நிர்பந்தம் பிரபல பொலிவூட் நடிகை செலீனா ஜேட்லிக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீமதி எனத் தலைப்பிடப்பட்ட ஹிந்தித் திரைப்படத்தின் படிப்பிடிப்புக்காக மாலைதீவுக்குச் சென்று திரும்பும் வழியிலேயே செலீனா ஜேட்லி இந்த சங்கடத்தை எதிர்கொண்டார்.
மாலைதீவிலிருந்து கொழும்பு வழியாக அவர் மும்பை திரும்புவதற்கு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், கொழும்பிலிருந்து மும்பைக்குச் செல்லும் விமானம் மிகத் தாமதமாகியது.
இதனால் செலீனா ஜேட்லியும் அவருடன் பயணம் செய்த குழுவினரும் விமான நிலையத்திலுள்ள ஜன்னல் எதுவுமில்லாத சிறிய அறையொன்றில் தங்க நேரிட்டது.
இலங்கை விஸா இல்லாததால் விமான நிலையத்திற்கு வெளியே செல்ல அவர் அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் மும்பை செல்லும் விமானத்தில் ஏறுவதற்கான அறிவித்தல் வரும்வரை அந்த அறையைவிட்டு வெளியே வரவும் செலீனாவும் அவரின் குழுவினரும் அனுமதிக்கப்படவில்லை. விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அறைக்கு வெளியே காவலில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
'அச்சூழ்நிலையில் மாட்டிக்கொண்டமை எனக்கு மிகவும் பீதியூட்டும் அனுபவமாகும்' என செலீனா கூறியுள்ளார். இறுதியில் மும்பைக்குத் திரும்பியமை குறித்து செலீனா, மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
"' ஒருபோதும் அவ்வாறான சூழ்நிலைக்குள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற பாடத்தைக் கற்றுக்கொண்டு நாம் திரும்பியுள்ளோம் என்பதுதான் நல்ல விடயம்" என அவர் தெரிவித்துள்ளார்.
jaliyuath Wednesday, 06 July 2011 07:47 PM
உலக சிறைக்கூடமே இப்படி என்றால் மறுமை எப்படி இருக்கும்? கொஞ்சம் சிந்தியுங்கள் வாசகர்களே
Reply : 0 0
xlntgson Wednesday, 06 July 2011 09:14 PM
சிறையைப் பற்றியதல்ல இது! claustrophobia என்பது கட்டிடம் அழகானதாக இருந்தாலும் ஒருவருக்கு வெறுப்பென்றால் ஏற்படும் ஒவ்வாமை எரிச்சல் துன்பம்! மறுமையைப் பற்றி நடிகைக்கு என்ன கவலை? jaliyuath எப்போதும் மறுமையைப் பற்றி சிந்திக்கின்றீர்களோ?
"ஒ! ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடை அணிந்து களிக்கும் நடனம் புரிவோம், ஒ ஒ ரசிக்கும் சீமானே...பெரும் ஞானியைப் போலே நடித்து வீணிலே உலகை விடவேண்டாம்...டன டன டனக்கு டன டன டனக்கு டன டனா.
Reply : 0 0
Nafar Wednesday, 13 July 2011 04:27 PM
நடிகை மட்டும்தான் மனிதரா? சட்டம் எல்லோருக்கும் சமம்தான். இது ஒரு பெரிய விடயமே இல்லை. நடிகை என்பதால் செய்தி வந்து இருக்கிறது. காலம் அப்படிதான் இருக்கிறது.
Reply : 0 0
உவைஸ்.எம்.எஸ் Friday, 05 August 2011 11:31 PM
நடிகை மட்டுமா இப்படி இருந்து தங்கி எட்டு மணி நேரம் தாமதித்து செல்கிறார்கள்? எத்தனையோ மக்கள் இப்படி தாமதித்து போவது உங்கள் கண்ணுக்கு தெரியாதா? நடிகை என்றாலும் சாதாரண மனிதன் தானே. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். இவர்களை போல் இன்னும் எத்தனையோ மக்கள் இருந்து போகிறார்கள். இவர்களுக்காவது ரூம் கிடைத்தது என்று சந்தோஷபடட்டும்.
Reply : 0 0
yaseenbawa hussain,pottuvil Saturday, 20 August 2011 02:34 AM
எல்லாம் மனிதனுக்குத்தானே இதென்ன கஷ்டமான அனுபவம்!
Reply : 0 0
siraj Friday, 02 September 2011 05:33 AM
இது எல்லாம் சகஜமப்பா. நடிகைக்கு என்ன கொம்பா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago