2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

இசைஞானியை கௌரவிக்க 1000 கிலோ நிறையில் கேக்; இளையராஜாவின் 1000 படங்கள் இணைப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 29 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பிரபல கேக் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இசைஞானி இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் 1000 கிலோ நிறை கொண்ட, 100 மீற்றர் நீளமான மெகா கேக் ஒன்றை தயாரித்து வருகிறது. அந்த கேக்கில் இளையராஜாவின் 1000 புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

முட்டை கலக்காமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சைவ கேக்கில், இளையராஜா தன் இசைப் பயணத்தை ஆரம்பித்த அன்னக்கிளி தொடங்கி, அவர் நடத்திய கச்சேரிகள், அண்மையில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் வரையான புகைப்படங்களை திகதி ரீதியில் இடம்பெறச் செய்துள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி காந்தி பிறந்த நாளில் இந்த கேக் எக்ஸ்பிரஸ் அவென்யூவில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த கேக்கை 25 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது. 600 கிலோ சொக்லேட், 150 கிலோ ப்ரஷ் க்ரீம், 80 கிலோ சர்க்கரை, 240 கிலோ கறுப்பு சொக்லேட், 100 கிலோ வெள்ளை சொக்லேட், 60 கிலோ ஜெல் மற்றும் 600 சர்க்கரை ஏடுகள் கொண்டு இந்த கேக்கை தயாரிக்கின்றனர்.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் வர்த்தக தலைவர் விபுல் மெஹ்ரோதா கூறுகையில், "ஒரு சமூக சேவை நோக்கில் இந்த கேக்கை தயாரித்துள்ளோம். கண்காட்சிக்குப் பின்னர், ஒரு சமூக நல அமைப்பிடம் இந்த கேக்கின் விற்பனை உரிமையை வழங்கவிருக்கிறோம்," என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .