2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

விமர்சிப்பதைவிட செயல்பெரிது

Editorial   / 2017 ஜூலை 01 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமர்சிப்பதைவிட செயல்பெரிது. அவர் அப்படிச் செய்கிறார்; இவர் இப்படிச் செய்தார் எனச் சொல்லிச்சொல்லியே காலத்தைக் கழிப்தைவிட, நாங்கள் என்ன செய்தோம்? இப்போது என்ன செய்துகொண்டிருக்கின்றோம்? என என்றாவது எம்மை நாம் கேட்பதுண்டா? 

ஆயினும், எல்லோரும் இப்படியானவர்கள் அல்ல; பெரும் பணிகளை உலகுக்கு ஆற்றியவர்கள் கூட, ஒன்றுமே பேசாமல் இருக்கின்றனர்.  

இத்தனை நல்லவர்களைக் கூடச் சீண்டி வெறுப்பேற்றும் பிரகிருதிகள் ஏராளம்! ஏராளம்!! செய்ய முடியாமல் வேடிக்கை பார்ப்தைவிடப் பணிகளைச் செய்பவர்களை வீணாக விமர்சனம் செய்வது பாதகச் செயல். 

காழ்ப்புணர்வு பொல்லாதது.மனம் சுத்தமானால் செயல் புனிதமாய் இருக்கும். குணம் கெட்டவர்களுக்கு நறுமணத்தின் மேன்மையும் புரியாது. குட்டையில் சீவிக்கும் பன்றியைப் போல், அரு​வரு​ப்பைத் தனதாக்கிக் கொள்பவர்களுக்கு தர்மத்தை தேவையற்றது எனக் கருதுவர். 

வாழ்வியல் தரிசனம் 30/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X