Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 12, சனிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னஞ்சிறு வயதிலே உன்னைச் சுற்றிச்சுற்றி வந்து விளையாடிய பையன், என் முதுமையிலும் உன்னுடன் என, கடைசிக்காலம் வரை இணைவேன் எனக் கனவிலும் கருதவில்லை.
எமக்குள் இருவருமே, சங்கமித்த இதயம்பற்றி, புரிந்துகொள்ளப் பராயத்துக்குப் புரிவதில்லை. ஜாதி, பேதம் பேசத் தெரியாது. உள்ளத்தில் உருவங்கள் பரஸ்பரம் விஷ்வரூபமாகின. காலம் உருண்டோட இளமைக்காலத்தில் புதுத்தேசம் புறப்பட்டேன். வசனம் பேசாது, வாயடைத்துப் பிரிந்தோம். திரும்பி நான் வந்தபோது, எங்கள் கரங்களைப் பிணைத்தார்கள் பெற்றோர்.
உறவினர் தூற்றினர். “என்ன துணிச்சல் சாதிவிட்டுப்போனீர்கள்?” காற்றில் கரைந்தது இவர்கள் பேச்சு. வாழ்வது நாங்கள்; இவர்களுக்கு என்ன ஆயிற்று? தூற்றிய உறவுகள் எங்கள் பிள்ளைகளைச் சம்பந்தம் கேட்டு வந்தார்கள். சுயநலம் வந்தால் பழைய கதை மறந்துபோகும்.
நான் திட்டுவதற்கு வாய் எடுத்தபோது, என் மனைவி என் வாயடைத்தாள். “தேடி வரும் உறவைத் திருப்பி அனுப்பாதீர். சரியோ, பிழையோ அவர்களுக்கானது. பிள்ளைகள் விருப்பம் எதுவோ, அதுவே நடக்கும்” என்றாள்.
வாழும் உரிமையும் அதைத் தேடும் வலிமையும் எமக்கேயானது. பிறருக்கு அல்ல.
வாழ்வியல் தரிசனம் 01/09/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago