2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாழ்வியல் தரிசனம் 21/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்திய நிபுணரிடம், தனது நோய் பற்றி சந்தேகம் இருப்பதாக ஒருவர் சொன்னார். அவரைக் கரிசனத்துடன் வைத்திய பரிசோதனை செய்த வைத்தியர், உங்களுக்கு ஒரு நோயும் கிடையாது, கண்டபடி பயப்பட வேண்டாம் எந்தவித மருந்துகளையும் உட்கொள்ள முயலவேண்டாம் என அறிவுரை கூறினார்.

வந்தவரின் முகம் சுருங்கிவிட்டது. அட, இவ்வளவு செலவு செய்தும் எனக்கு ஒன்றுமில்லை என்கிறீர்களே... வீண் அலைச்சல் என்றார். 

வைத்திய நிபுணருக்கோ சிரிப்பு வந்துவிட்டது. உங்களுக்கு நோய் இல்லை என்பதை அறிந்து, சந்தோஷப்படுதை விடுத்துக் கவலைப்படுகிறீர்களே என்றார்.

சில விசித்திரிப் பிர கிருதிகள், பிரச்சினைகளுடன் வாழப் பிரியப்படுகிறார்கள். தங்களை ஒரு நோயாளியாகச் சொல்லி, சுய பச்சாதாபங்களைத் தேடிக்கொள்ள விழைகிறார்கள்.

சந்தோஷமான வாழ்வை சந்தேகத்துடன் நோக்குதல் தப்பானது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .