2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாழ்வியல் தரிசனம் 20/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்களில் சிலர், அதிகாரம் என்பது தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களை அடக்குவதே நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதற்கு உகந்த வழி என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகையவர்கள், கேலி, கிண்டலடித்துத் தங்கள் மேலாண்மையை வெளிப்படுத்த முனைவதுமுண்டு.

ஆனால், தங்கள் வினைத்திறனையும் சுயதொழிலையும் விருத்தியடையச் செய்யும் நோக்கமும் இருக்காது. மேலும், அங்கு கருமமாற்றும் உத்தியோகத்தர்களின் ஆரம்ப அறிவுகூட அறவே இருக்காது.

பதவிகளால் மட்டுமே கௌரவம் கிடைப்பதில்லை. பதவியை நடத்தும் ஆளுமைத்திறன் அத்தியாவசியமானது. 

சிறந்த ஆளுமையுள்ளவர்கள் பணிவாகவே பணி செய்வர். நற்குணங்களே, நல்ல அனுபவங்களையும் நல்குகிறது.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .