2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 19/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'கோள்' சொல்லி வாழ்வதே களிப்பானது என எண்ணுபவர்கள், அதுவும் ஒரு வக்கிர புத்தி என உணர்வதேயில்லை.

நான் உண்மையைத்தானே சொன்னேன் என மற்றவர்களுக்கு வீம்பாகச் சொல்லிக் கொள்பவர்கள், ஒருவரின் நல்ல குணநலன்களைப் பற்றி மூச்சுவிடவே மாட்டார்கள்.

இது ஓர் அல்ப சந்தோஷம் என்றும் சிலர் கூறலாம். ஆனால், இந்தப் போக்கினால் பலரது சொந்த வாழ்க்கையில் பலத்த அடிகளும் விழக்கூடும்.

கணவன் மனைவி பிரிவு, நண்பர்களுக்கிடையிலான விரிசல், உறவுகள் விலகுதல் எல்லாமே ஒருவர் பற்றி இன்றும் ஒருவர் கோள் சொல்வதாலேயே பெரும்பாலும்  நிகழ்கின்றன.

கோள் சொல்வதை வத்தி வைத்தல், பற்ற வைத்தல் என்றும் கூறுவர். இந்தச் செயல் காட்டுத் தீயைவிட  மிக மோசமானது. இது கூட வஞ்சத்தின் ஒரு வடிவம்தான்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .