2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 01/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மண்ணில் பிறந்த அனைத்து உருக்களையும் அது மீண்டும், மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்றது.

பஞ்ச பூதங்களுக்கே இந்தச் சடங்கள் உரியன. இதில் உரிமை கோர மனிதர்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையவே கிடையாது.

நிலம், நீர், வளி, ஆகாயம், அக்கினி எனும் பஞ்ச பூதங்களிலிருந்தே இந்த உடல்கள் உருவாகின.

எல்லா உயிரினங்களுமே மண்ணுக்கும், விண்ணுக்கும், நெருப்பிற்கும் காற்றுக்கும் சொந்தமாகி இவை கலந்தே விடுகின்றன.

இந்த முறைமை சுற்றிச் சுற்றி நிகழ்வதும், அவை புதுப்புது வடிவங்களுடன் உலா வருவதும் இயற்கையின் அமைப்புமாகும்.

உயிர் ஓட, உருவம் மறு உருப்பெறும். இறைவன் இயற்கை மூலமாக இதனை இயக்குகின்றான். 

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .