2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 17/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளமை தொலைந்த பின்னர், இளையவர்களை முதியவர்கள் சபிக்கக் கூடாது. தாங்களும் இளமையுடன் இருந்த காலத்தை நினைவுகூரல் வேண்டும்.

வயதில் குறைந்தவர் செய்யும் சிறு தவறுகளைக் கணக்கீடு செய்வதே பெரியவர் பணியாக இருக்கின்றது எனச் சின்னவர்கள் விசனப்படுகின்றனர்.

இரு சாராருக்கும் இடையே உறவு பேணப்பட வேண்டும். முக்கியமாக பெரியோரைக் கனம் பண்ணுவதுடன், அவர்கள் சொல்லும் மதியுரைகளைப் பொறுமையுடன், வெறுப்பின்றிக் கேட்டறிக.

தவறு செய்தல் என்பது, எந்த வயதினரும் செய்யும் விடயம் தான். எனவே, வெறுப்பை ஏற்றுதல் சற்றும் பொருத்தமல்ல.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .