2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 12/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடிய காட்டு விலங்குகளும் தங்கள் குட்டிகளுக்கு பரிவுடன் பாலூட்டுகின்றன. பட்சி இனங்கள் தங்கள் குஞ்சுகளுக்குத் தங்கள் அலகினூடாக அவைகளின் அலகினுள் உணவையூட்டுவது அழகோ அழகு..

ஆனால், மனித இனம் இயற்கையாகவே சொரியும் பாலைத் தங்கள் குழந்தைகளுக்கு ஊட்டாமல் விடுவது கேட்டைத்தரும்.

இந்தியாவிலேயே பதினைந்து சதவீத தாயார்கள் தான் மகவுகளுக்குத் தாய் பாலூட்டுவதாக ஆய்வு நிலையம் ஒன்று கூறிய விடயம் வெட்கப்பட வேண்டிய தொன்று. தாய்மைக்கு அழகு தன் குழந்தைக்குப் பாலூட்டுதலும் ஒன்றுதான். 

பரிவுடன் ஊட்டுவதனால் அவள் மனதும் சரீரமும் புதுதேஜஸாக மிளிர்கின்றது. பாலூட்டுவதால் அழகு குறைவதில்லை நெஞ்சத்தில் திருப்தியும் பாசத்தில் கிளர்ச்சியும் உயரும்‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .