2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

மனித குலம் இருக்கும்வரை சரித்தி​ரம் நிலைக்கும்

Princiya Dixci   / 2017 மே 01 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருக்கின்ற உண்மை வரலாறுகளைப் புரட்டிப்போட்டாலும் அவை புதையுண்டு போவதில்லை. அதிகார வர்க்கம் அதனை எண்ணினாலும் அதனைச் செயலாக்க முடியாது. எழுப்பப்பட்ட எல்லா நாடுகளின் சரித்திரங்களும் அனைத்துப் பிரபல நூலகங்கள், இணையத் தளங்களிலும் பதிவு செய்யப்பட்டு விட்டன.

அத்தியாயம் ஒன்று, அத்தியாயம் இரண்டு எனத் தொடர்கதைகளை எழுதுவதுபோல், சரித்திரங்களில் புனைகதைகளை எழுதமுடியாது.

கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுகள், செப்பேட்டுப் பதிவுகள், சுடுமண் உருவங்கள், மட்பாண்டங்கள் வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட விடயங்களுக்கு கறுப்பு வர்ணம் பூசமுடியாது.

ஓர் இனத்தை, மொழியை, சமயத்தை கொச்சைப்படுத்துவதை இச்சையுடன் செய்யும் வஞ்சனையுடன் கருமமாற்றும் கூத்துகள் கேலியுடன் நோக்கப்படும். மனித குலம் இருக்கும்வரை சரித்தி​ரம் நிலைக்கும்.  

வாழ்வியல் தரிசனம் 01/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X