Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாமரனுக்கு உள்ள உலகஞானம், இரக்கம், அன்பு, பயன்கருதாது உதவும் மனப்பான்மை, இயற்கை பற்றிய அறிவு, அதிகம் படித்தவர்களுக்கோ, உயர்பதவி, அரசியலில் உள்ளவர்களுக்கோ இல்லை என்பதுதான் உண்மை.
அவன் அப்பாவித்தனத்தைக் கண்டதும், ஒன்றுமே புரியாதவன் என எண்ணுவது மடமை. சிலர் இத்தகையவர்களை ஏளனமாகப் பார்ப்பதுமுண்டு. தனது சொற்ப சம்பாத்தியத்தில் ஒரு பங்கை, அறம் சார்ந்த பணிகளுக்குக் கொடுத்துதவுவான்.
வசதி குறைவாக இருப்பின், தனது தேகத்தின் மூலம் தொண்டு செய்வான். தனது உறவினர்களுடன் பகிர்ந்து உண்பது, இவன் மகிழ்ச்சி. கோவில்களில், பொது இடங்களில் இவன் இன்றி எதுதான் இயங்கும். மயானம் வரை கூடவருவது இவன் இயல்பு.
சமைப்பதும் அதைப் பகிர்வதும் கோவில் உற்சவ காலத்தில் அல்லது தங்கள் பகுதி திருமண வைபவங்களில் மட்டுமல்ல, தங்களோடு அனைவரையும் இணைத்துக் கொள்கின்றான். சிக்கனமாகச் செலவு செய்கின்றான். உறவுக்காக எதையும் செய்கிறான். மெய்வருந்தி உழைப்பது இவனுக்குப் பிடிக்கும். பாமரனை, பரமன் பிள்ளை எனக் கருதுக.
வாழ்வியல் தரிசனம் 15/08/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago