2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

‘பசித்தால் மட்டும் உணவு தேடுவர்’

Editorial   / 2017 ஜூன் 28 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசைகளை அடக்கு என்று சொல்லுகின்ற சாமியார்களில் பலர் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

பெரும்பாலான சாமியார்களின் இருக்கை, படுக்கைகளைப் பாருங்கள், அவை சொகுசாகவே அமைக்கப்பட்டிருக்கும். அவர்கள் இல்லங்கள் குடில்கள் அல்ல. 

முன்னர் வாழ்ந்த யோகிகள், பரதேசிகள் போல் காட்டிலும் மேட்டிலும் வெறும் காலுடன் சுற்றித் திரிந்தார்கள். வாகனப் பாவனை இல்லாது விட்டாலும் வண்டிகளில் குதிரைகளில் சவாரி செய்வதுமில்லை. ஒருவேளை அன்னத்துக்கு திருவோடு ஏந்தினர். பசித்தால் மட்டும் உணவு தேடுவர். 

இப்போது அப்படி எவர் இருக்கின்றனர். பெண்பக்தைகள் புடை சூழ வாழ்கின்றனர். ஆன்ம ஈடேற்றத்துக்கு இவர்கள் வழி சொல்லப்போகிறார்கள்? ஆலயம் சென்று வழிபாடு செய்தலே ஆன்ம விமோசனம்.

வாழ்வியல் தரிசனம் 28/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X