2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

போதனை எனும்பெயரில் போதை

Princiya Dixci   / 2016 நவம்பர் 22 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் தங்கள் துயரங்களில் இருந்து விடுபட, எங்காவது நிம்மதி கிடைக்காதா என ஏங்கும் நிலையில், இறைவன் சந்நிதியை நாடுவது நல்லது. 

ஆனால், அதனை விடுத்து மேலான ஆன்மிகவாதிகள் எனச் சொல்வோரின் நிலையங்களுக்குச் சென்று, எரியும் நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகள்போல் விழுகின்றார்கள். 

துன்பத்தைத் தொலைக்க அஞ்ஞானிகளிடமா சிறைப்படுவது? மனதில் பாரம் என்றால் தலையில் இடியை விரும்பி ஏற்பதுபோல், போதனை எனும்பெயரில் போதையையே ஏற்றுகின்றமை ஒரு துன்பியல் நிகழ்வேதான். 

இதனால், பல பெற்றோர்கள் பிள்ளைகளை இந்த அஞ்ஞானிகள் மூலம் இழந்து நிற்கின்றார்கள். ஆன்ம ஞானம் மேன்மக்களின் வாயிலாக, மேலான கற்றலின் மூலம், அனுபவம் மூலம் பெறப்படுபவை. ஆன்மிகம் கடையில் விற்கும் உடனடி உணவு அல்ல! 

வாழ்வியல் தரிசனம் 22/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X